கேரளாவில் கனமழை பெய்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் நிறுவன சலுகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வோடபோன், ஜியோ, BSNL . மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது. நிறைய மக்களால் தங்கள் உறவினரிடம் முடியாமல் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் அவர்களது உறவினரிடம் பேச முடியாமல் போகிறது இதனால் சலுகையை அறிவித்துள்ளது.
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகளும், போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தங்களது கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச வைபை, வாய்ஸ் கால் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் பயனர்கள் தங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகை ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 டாக்டைம், 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு டேட்டா தானாக தங்களது அக்கவுன்ட்-இல் கிரெடிட் செய்யப்படுகிறது.வாய்ஸ் கால் சேவையை ஆக்டிவேட் செய்ய CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது *130*1# டையல் செய்ய வேண்டும். வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.
ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 கிரெடிட் வழங்கப்படுகிறது. பயனர்கள் *150*150# என டையல் செய்து உடனடியாக டாக்டைம் பெறலாம். அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச டேட்டா பயனர்களுக்கு தானாக ஆக்டிவேட் செய்யப்படும். ஐடியாவும் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.
BSNL சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா அடுத்த ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.