5G சிம் அப்க்ரேட் என்ற பெயரில் இந்த 4 தப்பை மட்டும் தப்பி தவறிகூட செய்யாதிங்க
டெலிகாம் பயனர்களுக்கு மெசேஜ் மூலம் TRAI எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த எச்சரிக்கை 5G சிம்முடன் இணக்கப்படுபவர்களுக்கு ஆகும்
எனவே TRAI யின் இந்த 5G சிம் எச்சரிக்கை பற்றி தெரிந்து கொள்வோம்.
சைபர் மோசடி அதிகம் நடந்து வருகின்றன இத்தகைய சூழ்நிலையில், இது போன்ற பிரச்சனையை தடுக்க, இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் அதாவது TRAI எச்சரிக்கை விடுத்துள்ளது. டெலிகாம் பயனர்களுக்கு மெசேஜ் மூலம் TRAI எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 5G சிம்முடன் இணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் 5ஜி சிம்மிற்கு அப்கிரேட் செய்யப் போகிறார்களானால், அவர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கவனிக்காவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே TRAI யின் இந்த 5G சிம் எச்சரிக்கை பற்றி தெரிந்து கொள்வோம்.
சிம் அப்க்ரேட் செய்யும்போது இந்த 4 தப்பை மட்டும் செய்யாதிங்க.
- டெலிகாம் நிறுவனங்கள் 5G சிம்மை இயக்க பயனர்களிடம் OTP ஐக் கேட்பதில்லை என்று TRAI பயனர்களின் போனில் எச்சரிக்கையை அனுப்புகிறது.
- இதை தவிர இந்த காலகட்டத்தில் எந்த விதமான தகவல்களும் கேட்கப்படுவதில்லை. உங்கள் சிம்மை அப்டேட் செய்ய வைக்கும் சாக்கில் OTP அல்லது விவரங்களைக் கேட்டால், அவ்வாறு செய்ய வேண்டாம்.
- உங்கள் சிம்மை 5Gக்கு அப்டேட் செய்வதற்க்கான லிங்க் அனுப்பப்பட்டு, அதைக் கிளிக் செய்யும்படி கேட்கப்பட்டால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வகையான லிங்க் இணைய மோசடியின் கீழ் அனுப்பப்படுகிறது. தவறுதலாக இந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் பணத்துடன் உங்களின் விவரங்களும் திருடப்படலாம்.
- பல நேரங்களில் ஹேக்கர்கள் பயனர்களை 5G க்கு அப்டேட் செய்ய சொல்கிறார்கள் இதில் பல வகையான ஈர்ப்புகள் இருக்கலாம் இந்த பேராசையில் நீங்கள் சிக்கிக் கொண்டால், 5G சேவைக்காக எந்தவொரு மொபைல் பயனருக்கும் ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டால், அதை தவிர்த்துவிடுவது நல்லது . இது மோசடியின் அடையாளமாக இருக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile