JioTV+ app மூலம் வரும் 800 சேனல் நன்மையுடன் ஸ்மார்ட் டிவி வரும் இதன் நன்மை என்ன
ஆப்பிள் மற்றும் அமேசானின் ஃபயர் OS ஆகியவற்றில் இயங்கும் பிற டிவிகளுக்காக JioTV+ ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் கனேக்சங்களுடன் வந்த ஜியோ செட்-டாப் பாக்ஸ்கள் (STBs) மூலம் இந்த செயலியை பிரத்தியேகமாக அணுக முடியும்.
பல மொழிகளிலும் வகைகளிலும் 800 டிஜிட்டல் டிவி சேனல்களைப் பார்க்கலாம்
ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் அமேசானின் ஃபயர் OS ஆகியவற்றில் இயங்கும் பிற டிவிகளுக்காக JioTV+ ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் கனேக்சங்களுடன் வந்த ஜியோ செட்-டாப் பாக்ஸ்கள் (STBs) மூலம் இந்த செயலியை பிரத்தியேகமாக அணுக முடியும். ஜியோடிவி+ ஆப்பை பயன்படுத்தி கஸ்டமர்கள் இப்போது பல மொழிகளிலும் வகைகளிலும் 800 டிஜிட்டல் டிவி சேனல்களைப் பார்க்கலாம் என்று டெலிகாம் ஆபரேட்டர் அறிவித்துள்ளது.
JioTV+ யில் என்னவெல்லாம் வழங்கப்படுகிறது.
JioTV+ app மூலம் 800க்கு மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல் வழங்கப்படுகிறது 10 மொழிகள் மற்றும் 20 வகைகளை உள்ளடக்கியது. இதன் கீழ் பாப்புலர் சேனல் செய்திகளுக்கான ஆஜ் தக் மற்றும் நியூஸ்18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் யூரோஸ்போர்ட் போன்ற விளையாட்டு சேனல்கள். இசை ஆர்வலர்கள் B4U மியூசிக் மற்றும் MTV ரசிக்கலாம், அதே நேரத்தில் குழந்தைகளுக்கு கார்ட்டூன் நெட்வொர்க் மற்றும் நிக் ஜூனியர் அக்சஸ் உள்ளது. இதனுடன் இதில் Jio Fiber மற்றும் Jio Air Fiber கஸ்டமர்களுக்கு JioCinema Premium, Disney+ Hotstar, Sony LIV, Zee5 மற்றும் Fancode போன்ற 13 பிரபலமான OTT ஆப்ஸிலிருந்து கண்டேண்டை அணுக முடியும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் தொகுக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதாகக் கூறப்படும் குழந்தைகள் பிரிவும் இதில் அடங்கும்.
JioTV+ App Eligibility
அனைத்து ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் கஸ்டமர்களுக்கு புதிய ஆப்பை அணுக முடியாது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்த பயனர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்:
JioAirFiber: அனைத்து plan
ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட்: ரூ. 599, ரூ. 899 மற்றும் அதற்கு மேல்
ஜியோஃபைபர் ப்ரீபெய்ட்: ரூ 999 மற்றும் அதற்கு மேல்
ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, ஜியோடிவி+ ஆப் ஆண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் டிவி மற்றும் அமேசான் ஃபயர்ஸ்டிக் டிவியில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. LG OS-ஆல் இயங்கும் டிவிகளுக்கான சப்போர்ட் விரைவில் தொடங்கப்படும்.
இருப்பினும், ஆண்ட்ராய்டு டிவி இயங்காத சாம்சங் டிவி வைத்திருப்பவர்கள், சாம்சங் இயங்குதளத்தில் கிடைக்காததால், ஆப்பை அணுக முடியாது. ஸ்மார்ட் டிவி இல்லாத பயனர்கள் அதை அணுகுவதற்கு ஒரு கூடுதல் இணைப்பாக STB ஐ வாங்க வேண்டும்.
இதையும் படிங்க:மோசடி திருட்டு கேரளா பெண்ணிடமிருந்து ரூ.12 லட்சம் பணம் அபேஸ்
JioTV+ அக்சஸ் எப்படி பெறுவது?
- JioTV+ ஐப் பயன்படுத்தத் தொடங்க, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்
- உங்கள் Android TV, Apple TV அல்லது Amazon Fire TV Stick யில் ஆப் ஸ்டோருக்குச் செல்லவும்.
- “JioTV+” சர்ச் செய்து ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
- JioTV+ ஆப்பை திறந்து, உங்கள் JioFiber அல்லது JioAirFiber ரெஜிஸ்டர் செய்யப்பட மொபைல் நம்பரை கொண்டு சைன் இன் செய்யலாம்.
- உங்கள் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile