HIGHLIGHTS
ஜியோஃபைபர் அதன் இந்திய வாடிக்கையாளர்களுக்காக புதிய பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
ரூ. 1,200 இன் கீழ் தொடங்கப்பட்ட புதிய திட்டம் மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டியாகும் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது
JioFiber இன் புதிய ரூ.1,197 பிராட்பேண்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது
தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் பிரிவான ஜியோஃபைபர் அதன் இந்திய வாடிக்கையாளர்களுக்காக புதிய பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் அதன் வெவ்வேறு பயனர்களுக்கு மாதத்திற்கு ரூ.399 முதல் பல திட்டங்களை வழங்குகிறது. இதற்கிடையில், ரூ. 1,200 இன் கீழ் தொடங்கப்பட்ட புதிய திட்டம் மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டியாகும் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது. புதிய பிராட்பேண்ட் திட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்…
JioFiber Rs 1,197 திட்டத்தின் நன்மைகள்
JioFiber இன் புதிய ரூ.1,197 பிராட்பேண்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இவ்வாறு, ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் அலைவரிசையானது அதிவேக இணையத்துடன் மொத்தம் 3.3TB ஐ உருவாக்குகிறது, அதன் பிறகு வேகம் குறைக்கப்படும். இந்த திட்டத்தில், பயனர்கள் 30 Mbps வேகத்தில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யலாம் .
எப்படி வாங்குவது இந்த JioFiber Rs 1,197 பிரிபெய்டு பிளான்
பயனர் தங்களின் Jio Fiber அக்கவுண்டை“MyJio App அல்லது “Jio.com யின் மூலம் ஆனலைனில் ரீசார்ஜ் செய்யலாம் சரி வாருங்கள் பார்க்கலாம் எப்படி பண்ணுவது என்று.
- 1. MyJio ஆப்பை திறக்கவும்.
- 2. லொகின் செய்ய உங்கள் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட ஜியோ ஃபைபர் மொபைல் எண் அல்லது சேவை ஐடி மற்றும் OTP ஐப் பயன்படுத்தவும்.
- 3. இப்போது மெனு விருப்பப் பாக்சில் "ஃபைபர்" என்பதைக் கிளிக் செய்யவும்.
- 4. ஜியோ ரூ.1,197 திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, “ரீசார்ஜ்/ரீபீட்” என்பதைக் கிளிக் செய்யவும்.
- 5. இதற்குப் பிறகு நீங்கள் Google Pay, PhonePe, Paytm, WhatsApp மற்றும் பிற விருப்பங்கள் மூலம் பணம் செலுத்தக்கூடிய கட்டண லொகின் பக்கத்தை அடைவீர்கள்.
- 6. பேமண்ட் மோடை தேர்ந்தேடுத்த “Pay now” ஒப்சனில் க்ளிக் செய்யவும்.
- 7. நீங்கள் ஜியோ ஃபைபர் ஆன்லைன் ரீசார்ஜுக்குப் ரெஜிஸ்டர் செய்யப் பயன்படுத்திய போன் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரியில் உறுதிப்படுத்தல் மெசேஜ் மற்றும் விலைப்பட்டியல் ஈமெயில் பெறுவீர்கள்
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.