ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகையின் வருடாந்திர சந்தா பயன்படுத்துவோருக்கு முன்பை விட கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோ ஃபைபர் வலைதளத்தில் பிராண்ஸ் முதல் டைட்டானியம் வரையிலான சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஃபைபர் சில்வர் சலுகையில் ரூ. 849 கட்டணத்திற்கு வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தேர்வு செய்யும் போது 800 ஜிபி மாதாந்திர டேட்டாவும், கூடுதலாக 200 ஜிபி டேட்டாவும் பெற முடியும். ரூ. 1200 விலையில் கோல்டு சலுகையை தேர்வு செய்வோருக்கு முந்தைய 1000 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 250 ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கிறது.
முன்னதாக ஜியோ ஃபைபர் பிரான்ஸ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 350 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. ரூ. 699 விலையில் கிடைக்கும் பிரான்ஸ் சலுகையில் தற்சமயம் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 250 ஜிபி டேட்டாவும், கூடுதலாக 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோஃபைபர் டைமண்ட் வருடாந்திர சலுகையில் 4000 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது. பிளாட்டினம் வருடாந்திர சலுகையில் 7500 ஜிபி மாதாந்திர டேட்டா, மாதாந்திர சலுகையில் 2500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டைட்டானியம் சலுகையில் வருடாந்திர சந்தாதாரர்களுக்கு மாதம் 15000 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.