Jio vs Vi vs Airtel: மிக குறைந்த விலை போஸ்ட்பெய்டு திட்டத்தில் எது பெஸ்ட்?

Updated on 27-Apr-2023
HIGHLIGHTS

போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தில் முதலில் ஒரு சிலருக்கு மட்டுமர் அறிமுகப்படுத்தியது

இப்போது அன்லிமிடெட் டேட்டாவுடன் கூடிய போஸ்ட்பெய்ட் திட்டங்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவையும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன

போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தில் முதலில் ஒரு சிலருக்கு மட்டுமர் அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது அவை மிகவும் மலிவாகவும் பயன்படுத்த எளிதானதாகவும் மாறிவிட்டன. அதாவது, ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எளிதானது மற்றும் அவர்களின் திட்டங்களை எடுத்துக்கொள்வதும் எளிதானது. இப்போது அன்லிமிடெட் டேட்டாவுடன் கூடிய போஸ்ட்பெய்ட் திட்டங்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவையும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன, இது குறைந்த விலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக அம்சங்களை வழங்குகிறது. நீங்களும் மலிவான போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தேடுகிறீர்களானால், இந்த அறிக்கை உங்களுக்கானது. 

Jio வின் மிக குறைந்த விலை திட்டம்.

டெலிகாம் நிறுவனமான ஜியோவின் அன்லிமிடெட் டேட்டாவுடன் கூடிய குறைந்த விலை பேக்கேஜ் ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் அன்லிமிடெட் மொபைல் டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் வழங்குகிறது . JioTV, JioNews, JioSecurity, JioCinema மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோவின் பிற சேவைகளுக்கான இலவச அணுகலையும் பயனர்கள் வழங்குகிறது.

ஏர்டெல்லின் மிக குறைந்த விலை போஸ்ட் பெய்டு திட்டம்.

ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உடன் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது மிக குறைந்த விலை திட்டமான 499 ரூபாயில் வருகிறது.இந்த திட்டத்தில்  ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 75GB டேட்டாவுடன் அன்லிமிடெட்  வொய்ஸ் காலிங் மற்றும் 100 SMS நன்மை வழங்குகிறது. இதனுடன் அமேசான் ப்ரைம் மற்றும் பிரைம்  மற்றும் டிஸ்னி  ப்ளஸ் ஹாட்ஸ்டார் சபஸ்க்ரிஷனுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் 5G  டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.

Vi யின் மிக குறைந்த போஸ்ட்பெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவில் மிக குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டமாக 701 ரூபாயில் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட்  காலிங் நன்மை வழங்குகிறது. இதை தவிர இதில் ஒவ்வொரு மாதமும் 3,000 SMS நன்மை வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் நான்கு மாதங்களுக்கு அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப், டிஸ்னி ஹாட்ஸ்டார் SUPER (TV & Mobile)க்கான ஒரு வருட சந்தா, Vi திரைப்படங்கள் மற்றும் டிவி ஆப்ஸிற்கான VIP சந்தா, ZEE5 பிரீமியம் திரைப்படங்கள், அசல் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஆறு மாத விளம்பரமில்லா Hungama மியூசிக் ஆகியவை அடங்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :