Jio VS Airtel VS VI யின் ரூ,549 திட்டத்தில் எது அதிக நன்மை வழங்குகிறது ?

Jio VS Airtel VS VI யின் ரூ,549 திட்டத்தில் எது அதிக நன்மை வழங்குகிறது ?
HIGHLIGHTS

Vodafone-Idea சமீபத்தில் அதன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது

இந்த திட்டமானது அதிக வேலிடிட்டி விரும்பும் பயனர்களுக்காக வைக்கப்பட்டிள்ளது

Airtel ரூ,549, Jio ரூ,549 மற்றும் VI யின் ரூ,549 திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

Vodafone-Idea  சமீபத்தில் அதன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் விலை ரூ,549 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டமானது அதிக வேலிடிட்டி விரும்பும் பயனர்களுக்காக வைக்கப்பட்டிள்ளது அதாவது இந்த திட்டத்தை ஒரு வேலிடிட்டி பிளான் என்று சொல்லலாம் இப்பொழுது அதே போல் Airtel ரூ,549, Jio ரூ,549 மற்றும் VI யின் ரூ,549 திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ,549 திட்டம்

VI யின் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 180  நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதில் தினமும் 1GB  டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படுகிறது   மேலும் உங்களுக்கு இதில் கூடுதல்  டேட்டாவை பெற  விரும்பினால்  மற்ற டேட்டா  திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். மேலும் இந்த இந்த திட்டத்தில் எந்த நேஷனல் அல்லது  லோக்கல் கால்களின் நன்மை கூட கிடைக்காது, இதை தவிர இந்த திட்டத்தில் SMS  நன்மை கூட கிடையாது, நீங்கள்  சிம்மை ஏக்டிவாக வைத்திருக்க விரும்பினால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.

Airtel ரூ 549 கொண்ட திட்டம்.

ஏர்டெலின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி Vi  யின் திட்டத்தை போலவே 56 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. இதில் கிடைக்கும் டேட்டா நன்மை பற்றி பேசினால் தினமும் 2GB டேட்டா மற்றும் இதில் அன்லிமிடெட்  காலிங் நன்மையை வழங்குகிறது இதை தவிர இதில் 100SMS  நன்மை கூட வழங்கப்படுகிறது  இதில்  மற்ற நன்மைகள்  பற்றி பார்த்தால் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ் , அப்பல்லோ 24|7 வட்டம், ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் இந்த திட்டத்துடன் Wynk Music ஆப்ஸ் அணுகல் கிடைக்கிறது.

Jio ரூ, 533 கொண்ட திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் ஏர்டெல்  போலவே வேலிடிட்டி நன்மை வழங்குகிறது அதாவது ஜியோவின் ரூ, 533 யில் 56 நாட்கள் வேலிடிட்டி தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட்  காலிங் நன்மை தவிர 100 SMS நன்மை வழங்குகிறது. நீண்ட கால திட்டத்துடன், JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் வழங்குகிறது .

குறிப்பு :- இந்த மூன்று திட்டத்தை ஒப்பிடும்போது ஜியோ மற்றும் ஏர்டெலில்  வேலிடிட்டி மட்டுமில்லாமல் காலிங், டேட்டா மற்றும்  SMS உடன் மற்ற நன்மையும் வழங்கப்படுகிறது. ஆனால் VI வெறும் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது இதன் மூலம் எது சிறந்த திட்டம் என உங்களுக்கே தெரிந்து இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo