Jio VS Airtel Vs VI:ரூ,209 யில் வரும் இந்த திட்டத்தில் எது பக்க மாஸ்?

Jio VS Airtel Vs VI:ரூ,209 யில் வரும் இந்த திட்டத்தில் எது பக்க மாஸ்?
HIGHLIGHTS

இந்தியாவின் Jio மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டராக அறியப்படுகிறது

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவும் ரூ.209 ப்ரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளன,

jio , airtel மற்றும் VI எந்த ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்தது என்று பார்க்கலாம்.

Reliance Jio தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை மற்றும் சிறந்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி கொண்டு வருவதால், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டராக அறியப்படுகிறது. அத்தகைய ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 209 ஆகும் வேலிடிட்டி டேட்டா வரை அனைத்தும் மிகவும் நல்லது. இருப்பினும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவும் ரூ.209 ப்ரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளன, ஆனால் அவை ஜியோவுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் குறைவுதான் இருக்கிறது ஏனெனில் அவை ஜியோவைப் போன்ற பலன்களை வழங்கவில்லை. எனவே jio , airtel மற்றும் VI எந்த ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்தது என்று பார்க்கலாம்.

Jio Rs 209 Plan

ஜியோவின் 209 ரூனையில் வரும் இந்த திட்டத்தில் தினமும் 1GB ஹை ஸ்பீட் இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது, இதில், பயனர்கள் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியையும் வழங்குகிறது, இது தவிர, இந்த பேக்கில் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச அக்சஸ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 28 நாட்களுக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் நீங்கள் பெறலாம்.

Airtel Rs 209 Plan

இப்பொழுது ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 209 ரூபாயில் வருகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்களுக்கு சர்விஸ் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இதில் தினமும் 1GB டேட்டா அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் இலவச HelloTunes மற்றும் Wynk Music சந்தா.அடங்கியுள்ளது.

Vi Rs 209 Plan

கடைசியாக இதில் வோடபோன் ஐடியாவின் 209 ரூபாயில் வரும் ப்ரீபெயிட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் வருகிறது ஆனால் இதில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 4ஜிபி இன்டர்நெட் டேட்டாவை மட்டுமே வழங்குகிறது இருப்பினும், இதிலும் நீங்கள் ட்ரூலி அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளைப் பெறலாம். இந்த திட்டம் பயனர்களுக்கு Vi Movies & TVக்கான இலவச சந்தாவை வழங்குகிறது, இதில் 5000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், Aaj Tak, ABP, Discovery போன்ற 200 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் அடங்கும்.

Jio VS Airtel Vs VI இதில் எந்த திட்டம் பெஸ்ட்?

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் ஒப்பிடும்போது ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டம் சிறந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஜியோ மூலம், ஏர்டெல்லை விட 7 நாட்கள் கூடுதல் சேவை வேலிடிட்டியைப் வழங்குகிறது அதே நேரத்தில் டேட்டாவைப் பொறுத்தவரை, ஜியோ Vi ஐ விட 7 மடங்கு முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது பைல் ஷேரிங் அம்சம் 2GB வரையிலான பைல் ஷேர் செய்ய முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo