ரிலையன்ஸ் ஜியோ வோல்ட்E சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ வோல்ட்E  சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம்
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ வோல்ட்E சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம்

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட்E  சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ கே.கே.டி.ஐ. நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் கே.கே.டி.ஐ. நிறுவனம் தனது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் வோல்ட்Eசேவையை வழங்கும் முதல் ஜப்பான் நிறுவனமாக இருக்கிறது.

இதன் மூலம் வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையை வழங்கும் உலகின் நான்கு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜியோ சேவையை பல்வேறு நாடுகளுக்கும் வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக புதிய சேவையை வழங்கி இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. 

வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் மூலம் சர்வதேச பயணர்கள் ஜியோவின் உலகத்தரம் வாய்ந்த அனைத்து IP நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என தெரிவித்துள்ளது.

கடந்த 20 மாதங்களாக ஜியோவின் அதிவேக நெட்வொர்க் என்றும், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.06 எம்.பி. ஆக இருக்கிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோவின் டவுன்லோடு வேகம் ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய பயனர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்லும் அனைத்து பயனர்களுக்கும் அதிவேக டேட்டா மற்றும் வாய்ஸ் அனுபவத்தை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கே.கே.டி.ஐ. வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க்கிற்கு வரவேற்கிறோம் என ரிலையன்ஸ் ஜியோதெரிவித்துள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo