Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது சமிபத்தில் அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியது. அதன் மிகவும் பேமசான ரூ,395 மற்றும் ரூ,1559 திட்டத்தின் விலையும் உயர்த்தப்பட்டது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் கிடைக்காது, இருப்பினும் இந்த திட்டத்தின் உயர்த்தப்பட்ட விலையில் கிடைக்கிறது, இன்று நாம் வேல்யூ திட்டத்தின் விலை உயர்வை பற்றி பார்க்கலாம்.
இந்த வேல்யூ திட்டத்தின் கீழ் ரூ,189, ரூ,479, மற்றும் ரூ,1899. விலையில் வருகிறது. இதில் ரூ,189, திட்டமானது முன்பு ரூ,155க்கு கிடைத்தது அதே போல் ரூ,479, மற்றும் ரூ,1899. திட்டமும் முன்பு இதன் விலை ரூ,395 மற்றும் ரூ,1559.ஆகா இருந்தது மேலும் இதிலிருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ஜியோவின் இந்த ரூ,189 திட்டத்தை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 2GB யின் டேட்டா மற்றும் 300 SMS உடன் JioTV, JioCinema, and JioCloud வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை உயர்ந்த பிறகும் இந்த நன்மை மாறவில்லை
ஜியோவின் ரூ,479 திட்டத்தை பற்றி பேசினால், இதன் சர்விஸ் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 6GB டேட்டா மற்றும் 1000 SMS நன்மையும் வழங்கப்படுகிறது, அனால் இதில் அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்காது, ஆனால் முன்பு ரூ,395 திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை கிடைத்தது . கூடுதலாக இதில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மையும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ,1899 திட்டத்தை பற்றி பேசினால் 336 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது இது சுமார் 11 மாதம் வேலிடிட்டி இருக்கும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 3600 SMS, மற்றும் 24GB யின் டேட்டா உடன் இந்த திட்டம் வழங்குகிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை வழங்கப்படுகிறது.
இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதன் லிமிட் FUP (fair usage policy) குறையும்போது இதன் ஸ்பீட் 64 Kbps ஆகா குறைக்கப்படுகிறது இந்த திட்டத்தை இந்திய முழுவதும் வழங்குகிறது இந்த திட்டமானது வெறும் காலிங் நன்மை மற்றும் சிம் எக்டிவில் தேவையை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.
இதையும் படிங்க :BSNL அரசு ஒதுக்கிய பட்ஜெட் இனி அனைத்திலும் டாப் மத்ததெல்லாம் சும்மா