16.1 கோடிக்கும் அதிகமான கஷ்டமர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாபம் பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையில் தொடங்கி தற்போது குறைந்த விலையில் 4G டேட்டா, இலவச வாய்ஸ் கால், SMS போன்றவற்றை அளித்து வருகிறது. இத்துடன் ஜியோ போன் விற்பனையிலும் சாதித்துள்ள அந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.
ஜியோவின் வருகைக்குப் பின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அட்டகாசமான சலுகைகளை குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கிவிட்டன.
ஆனால், 2016ஆம் ஆண்டு அக்கோடபரில் ஜியோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரூ.271 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.