Jio True 5G சேவை தமிழ்நாட்டில் 6 முக்கிய நகரங்களுக்கு கிடைத்துள்ளது, எந்த எந்த நகரங்கள் தெரியுமா?

Jio True 5G சேவை தமிழ்நாட்டில் 6 முக்கிய நகரங்களுக்கு கிடைத்துள்ளது, எந்த எந்த நகரங்கள் தெரியுமா?
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ 6 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ்நாட்டில் கால்தடத்தை விரிவுப்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதற்காக சுமார் 40 ஆயிரத்து 446 கோடி ரூபாய் ஜியோ நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது

ரிலையன்ஸ் ஜியோ 6 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ்நாட்டில் கால்தடத்தை விரிவுபடுத்தியதால் ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளை டெல்லி, மும்பை, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது, அதே நேரத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி நாத்வாரா மற்றும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் விரைவில் பல இடங்களில் ஜியோ 5ஜி விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தை தமிழக தொழில்நுட்ப துறை மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளிவந்த தகவலின்படி, தமிழகத்தில் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதற்காக சுமார் 40 ஆயிரத்து 446 கோடி ரூபாய் ஜியோ நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

"தமிழகத்தில் மேலும் ஆறு நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜியை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விரைவில், ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க் தமிழகம் முழுவதும் இருக்கும். டிசம்பர் 2023க்குள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஜியோவின் ட்ரூ 5ஜியைக் கொண்டிருக்கும். 

இந்த நகரங்களில் உள்ள ஜியோவின் பயனர்கள் 1 ஜிபிபிஎஸ்-பிளஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க, கூடுதல் கட்டணமின்றி 'வெல்கம் ஆஃபருக்கு' அழைக்கப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் 6 முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 10 அன்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தியது, பின்னர், குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த நாள் விரிவுபடுத்தியது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo