நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வரவர சரியில்லை என்று தீர்மானித்து, பழைய நெட்வொர்க்கிற்கு மாறத் திட்டமிட்டு உள்ளவர்களுக்கு ஒரு செய்தி.
கடந்த ஆண்டு நவம்பரில் 4ஜி டேட்டா வேகத்தில் ஜியோ முதலிடம் பிடித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியாக 11வது மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 25.6 mbps ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில், ஜியோவின் வேகம் ஜனவரி 17.6 mbps, பிப்ரவரி 16.5 mbps, மார்ச் 18.5 mbps, ஏப்ரல் 19.1 mbps, மே 18.8 mbps, ஜூன் 18.7 mbps, ஜூலை 18.4 mbps, ஆகஸ்ட் 18.4 mbps, செப்டம்பர் 21.9 mbps, அக்டோபர் 21.8 mbps ஆக பதிவாகியுள்ளது.
ஏர்டெல்லைப் பொறுத்தவரை 9.8 mbps அளவிலான வேகத்தை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே ஏர்டெல் 7.5 mbps, 9.3 mbps வேகத்தை பதிவு செய்தது.
வோடபோன் இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த நவம்பரில் 10 mbps வேகத்தை பதிவு செய்துள்ளது. மேலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 8.7 mbps, 9.9 mbps வேகத்தை பதிவு செய்தது.
ஐடியா செல்லுலாரைப் பொறுத்தவரை, கடந்த நவம்பரில் 7 mbps வேகத்தைப் பெற்றிருந்தது. கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து குறைவான வேகத்தையே அளித்து வருகிறது. 2017ல் பதிவான மிகக்குறைந்த வேகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.