இந்தியாவில் ஜியோ நிறுவனம் 4ஜி வொய்ஸ் மற்றும் இன்டர்நெட் செவையை இலவசமாக அறிமுகம் செய்ததன் மூலம் தொலைத்தொடர்பில் புரட்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 4ஜி சேவையின் கட்டணங்களை குறைக்க தொடங்கியது.
இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் சிக்னல் பற்றிய புதிய அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்கள் ஊக்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.
2018 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் சராசரியாக 11.23 Mbps வேகத்தில் மொபைல் டேட்டா வழங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 9.13 Mbps வேகத்தில் இரண்டாவது இடத்திலும், ஜியோ மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்திருக்கின்றன.
அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன.
நாட்டின் முன்னணி நிறுவனங்களின் கனெக்டிவிட்டி நாட்டின் 15 பெரு நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், 4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகமும் அதிக வேறுபாடு கொண்டிருக்கின்றன. ஊக்லா வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் இருந்திருக்கிறது.
அதிகளவு கனெக்டிவிட்டி வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ 99.3% பகுதிகளில் சீரான இன்டர்நெட் வழங்கி முதலிடம் பிடித்திருக்கிறது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.