பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது. இதில் மாதாந்திர, அரையாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்கள் அடங்கும். நீங்கள் அடிக்கடி மாதாந்திர ரீசார்ஜ் செய்வதிலிருந்து விடுபட விரும்பினால், வருடாந்திரத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தில் 4G உடன் 5G அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் காலிங் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது, இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், 23 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியாகும். இந்த வழியில் மொத்தம் 388 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே கூடுதல் 23 நாட்கள் வேலிடிட்டியாகும்போது மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி வழங்கப்படுகிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் செய்தி அனுப்ப வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த திட்டத்தில் டேட்டா வரம்பு முடிந்த பிறகு, வேகம் 64 Kbps ஆக குறைகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் 5G காலிங் வசதியைப் வழங்குகிறது.
ஜியோவின் ரூ.2879 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் செய்தி அனுப்ப வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்களுக்கு வருகிறது, இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது.