Reliance Jio Removes Rs 189 Plan and Rs 479 Recharge plan
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய பாப்புலர் திட்டங்களில் ஒன்றாகும், இது அதன் இரண்டு பாப்புலர் திட்டத்தை வழங்குகிறது, இதில் வரும் முதல் திட்டம் ரூ,189 ஆப்சனில் வருகிறது, இது ஒரு என்ட்ரி லெவல் திட்டமாகும் இது சிம் எக்டிவாக வைக்க உதவும். இதில் மற்றொரு திட்டம் 479ரூபாயில் வரும் திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மை என்ன பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,189யில் வருகிறது இது ஒரு என்ட்ரி லெவல் திட்டமாகும் இந்த திட்டத்தின் விலை உயர்வுக்கு முன்பு இதன் விலை 155ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது அந்தத் திட்டமும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் வரம்பற்ற அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.
இதில் வரும் மற்றொரு திட்டம் ஜியோவின் ரூ,479 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இது ரூ.479 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் 1000 SMS மற்றும் 6ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது.
இப்போது TRAI (Telecom Regulatory Authority of India) டெலிகாம் நிறுவனங்களுக்கு வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று காட்டியுள்ளன. அவர்கள் அத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர், அதன் சராசரி தினசரி செலவு முந்தையதைப் போலவே உள்ளது, ஆனால் இப்போது அதில் டேட்டா நன்மை கிடைக்காது.
உண்மையில், ஜியோவின் வொயிஸ் மற்றும் SMS-மட்டும் திட்டங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்தத் திட்டங்களில் டேட்டா பூஸ்டர்களைப் பயன்படுத்த முடியாதபடி ஜியோ உருவாக்கியுள்ளது. எனவே ஜியோவின் குரல் மற்றும் SMS மட்டுமே திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் தங்களுக்கு மொபைல் டேட்டா தேவையில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.
இதையும் படிங்க:Jio யின் இந்த திட்டத்தின் ஆபர் நன்மை இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வருகிறது