jio most affordable data vouchers for new year 2025
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு சமிபத்தில் Jio New Year Offer கீழ் பல புதிய சலுகையை அறிவித்தது இந்த திட்டத்தின் விலை 2025ரூபாயாகும் இதன் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும், அதாவது இந்த திட்டத்தின் நன்மை இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய போகிறது இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
Jio கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் அன்லிமிடெட் 5G இன்டர்நெட் மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது . இருப்பினும், 4ஜி கனெக்சன் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள், மொத்த வேலிடிட்டி காலத்தில் மொத்தம் 500 ஜிபி. முழு வேலிடிட்டி போது கஸ்டமர்கள் ஒரு நாளைக்கு 100 SMS பெறலாம் .
ரூ.2,150 வரை மதிப்புள்ள வவுச்சர்கள் மற்றும் கூப்பன்கள் கிடைக்கும்
டேட்டா மற்றும் வொயிஸ் நன்மைகள் தவிர, ஜியோ புத்தாண்டு வரவேற்பு திட்டம் பல்வேறு கூப்பன்களையும் வழங்குகிறது. கஸ்டமர்கள் ₹500 மதிப்புள்ள Ajio கூப்பனைப் பெற தகுதியுடையவர்கள், அதை குறைந்தபட்ச ஷாப்பிங் மதிப்பான ₹2,500க்கு ரிடீம் செய்யலாம். அதே நேரத்தில், Swiggyஇலிருந்து ரூ,499 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ,150 மதிப்பிலான வவுச்சரைப் பெறலாம் , மேலும் Easemytrip.com யின் மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்டில் செய்யப்பட்ட விமான முன்பதிவுகளுக்கு ₹ 1,500 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த கூப்பன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும் MyJio பயன்பாட்டிலிருந்து கிடைக்கும்
ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும் ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு வரவேற்பு திட்டம் 2025 ஐ புத்தாண்டில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த சலுகை ஜனவரி 31 வரை மட்டுமே. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு நீண்ட கால திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும்.
இதையும் படிங்க:Jio Republic Day சூப்பர் சலுகை அறிவிப்பு கிடைக்கும் பல மடங்கு நன்மை என்ன என்ன பாருங்க