உலகளவில் 17வது இடத்தை பிடித்ததா அது எதில் ?
பாஸ்ட் கம்பெனி பிஸ்னஸ் மேக்சின் வெளியிட்டுள்ள உலகின் 50 மிக புதுமையான நிறுவனங்கள் லிஸ்டில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ 17வது இடத்தை பிடித்துள்ளது.
பாஸ்ட் கம்பெனி என்ற அமெரிக்க பிஸ்னஸ் மாத இதழ் உலகின் 50 மிக புதுமையாக நிறுவனங்களை பட்டியிட்டுள்ளது. இதில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ உலகளவில் 17வது இடத்தையும், இந்தியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தொழில்நுட்பத்தில் முன்னணியாக திகழ்ந்து, டிஜிட்டல் சேவையில் புதுமையை புகுத்தி இந்தியாவை உலகளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னேற உதவியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி புரட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள், நெட்பிலிக்ஸ், டென்செண்ட், அமேசான், ஸ்பாட்டிபை உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுடன் ஜியோ கைக்கோர்த்துள்ளது.
இந்த வருடத்தின் மிக புதுமையான நிறுவனங்களின் பட்டியல் எழுச்சியூட்டும் வகையிலும், புதுமையை தழுவி நிறுவனங்கள் எப்படி அர்த்தமுள்ள மாற்றத்திற்காக வேலை செய்கிறது என்பதை வெளிக்காட்டியுள்ளது என்று பாஸ்ட் கம்பெனி இதழின் துணை ஆசிரியர் டேவிட் லிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile