ஐபிஎல் 2023 சீசனின் தொடக்கத்தில் ஜியோ புதிய கிரிக்கெட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் பயனர்களுக்கு 3ஜிபி தினசரி டேட்டா பேக் மற்றும் அன்லிமிடெட் காலிங் எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி நன்மைகளை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி 40ஜிபி இலவச கூடுதல் டேட்டாவையும் நிறுவனம் வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டங்கள் ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.999ல் வருகின்றன.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி தினசரி டேட்டா மற்றும் 14 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகியவை அடங்கும். ஜியோ வெல்கம் 5ஜி சலுகையைப் பெற்ற பயனர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 5ஜி டேட்டா கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாவுடன் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெறலாம். திட்டத்தில் சிறப்புச் சலுகையாக, ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டா ஆட்-ஆன் வவுச்சர் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் .
ஜியோவின் இந்த திட்டம் ஜியோ பயன்பாடுகளின் சந்தாவுடன் அன்லிமிடெட் காலிங் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. 5G பயனர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.241 மதிப்புள்ள 40ஜிபி இலவச கூடுதல் டேட்டாவைப் பெறலாம்
சிறப்பு ப்ரீபெய்டு மொபைல் அடிப்படை திட்டங்களுடன், கிரிக்கெட் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களையும் ஜியோ வழங்குகிறது. ரூ.222 டேட்டா ஆட்-ஆன் திட்டத்தில், பயனர்கள் 50ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள், இது செயலில் உள்ள திட்டம் முடியும் வரை செல்லுபடியாகும். இது தவிர, ரூ.444 திட்டமானது 100ஜிபி கூடுதல் டேட்டாவை 60 நாட்களுக்கு வழங்குகிறது, ரூ.667 திட்டம் 150ஜிபி டேட்டாவை 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.