ஜியோ டெக்னோலோஜி துறையில் காலடி வைத்ததிலிருந்து கடும் போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம்,ஏன் என்றால் இதற்க்கு முன்னடி வந்த செய்தியில் வோடபோன் புதிய கேஷ்பேக் அறிவித்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே, ஜியோ வந்ததிலிருந்து மற்ற டெக்னோலஜி நிறுவங்கள் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறது என்றே சொல்லலாம், இதனை தொடர்ந்து தர்போது, ஜியோ நிறுவனம் 200% கேஸ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது.
இதற்க்கு முன்னர் 100% கேஷ்பேக் ஆஃபரை வழங்கிய ஜியோ தற்போது அடுத்தை படியை எட்டி 200% கேஷ்பேக் அறிவித்துள்ளது, இதன்படி, ரூபாய் .399-க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 50 ரூபாய் மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்குகிறது. இவ்வாறு முதலில் ரூ.400 கேஸ்பேக் கிடைக்கிறது.
பின்னர், ரூபாய் .799-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, முன்பு கிடைத்த வவுச்சர்களைப் பயன்படுத்தி, 400 ரூபாய் குறைத்துக் கொண்டு, மீதம் 399 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆனால், இந்த ரூபாய் பேடிஎம், மொபிகுவிக், அமேசான் போன்றவற்றில் கேஷ்பேக் பே பேலன்ஸ் ஆக ஜியோ கொடுத்துவிடுகிறது. இவ்வாறு ரூபாய் .399-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூபாய் .799-க்கு நன்மையின் பயன் அடையாளம்.