இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் வாடிகயலர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒரு வருடம் வரை வரக்கூடிய இந்த திட்டத்தில் Amazon Prime Video அக்சஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரைம் வீடியோ கண்டேண்டை லைவாக தங்கள் போன்களில் பார்க்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும், அதுவும் டேட்டா டென்ஷன் இல்லாமல். ஏனென்றால், ஜியோவின் இந்த திட்டத்தில் ஏராளமான டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை உள்ளது.
நாம் பேசும் திட்டத்தின் விலை ரூ.3227. இது ஒரு விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டம் என்பது உண்மைதான், ஆனால் அதன் பலன்கள் முற்றிலும் பணத்திற்கு ஏற்றது மற்றும் அது உங்களிடம் வசூலிக்கும் பணத்திற்கு முழுமையான நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்.
இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசுகையில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம் 2024ல் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது சிறந்த வருடாந்திர திட்டமாகும் இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பயனர்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS ஆகியவற்றைப் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் பிரைம் வீடியோ மொபைல் எடிசன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை அடங்கும். FUP டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது. பிரைம் வீடியோ மொபைல் எடிசன் ஒரு வருடத்திற்கானது மற்றும் திட்டத்துடன் வரும் ஜியோ சினிமா அக்சஸ் பிரீமியம் சந்தா அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். பிரீமியம் கண்டேண்டை பார்க்க, பயனர்கள் அதைத் தனியாக வாங்க வேண்டும்.
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை டிவி அல்லது லேப்டாப்பில் பார்க்க பயன்படுத்த முடியாது. இது தவிர, இதில் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 5ஜி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் 4ஜி போன் இருந்தால் 5ஜி சலுகை கிடைக்காது. இருப்பினும், நீங்கள் இன்னும் Prime Video மற்றும் 2GB தினசரி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.