ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா

Updated on 23-Jun-2018
HIGHLIGHTS

ஜியோ அதிகாரப்பூர்வ வெப்சைட்டின்படி ஜியோலின்க் என்பது 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் ஆகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அதிவேக இன்டர்நெட் கனெக்டிவிட்டி பெற பயன்படுத்தலாம்

ஜியோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் படி, ஜியோலின்க் என்பது 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் என்பது ஆகும். இதில் பயனர்கள் தங்கள் வீட்டிற்கு அதிவேக இன்டர்நெட் கனெக்டிவிட்டி பெற பயன்படுத்தலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ஆனது இந்திய டெலிகாம் துறையில் ஏற்கனவே ஏற்படுத்திய இடையூறுகளை சமாளிக்கவே – ஏர்டெல் மற்றும் ஐடியா போன்றே நிறுவனங்களுக்கு – பல மாதங்கள் ஆகிய நிலைப்பாட்டில் ஜியோ அதன் ஜியோலின்க் (JioLink) வாடிக்கையாளர்களுக்கான மூன்று புதிய டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜியோ அதிகாரப்பூர்வ வெப்சைட்டின்படி  ஜியோலின்க் என்பது 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் ஆகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அதிவேக இன்டர்நெட் கனெக்டிவிட்டி பெற பயன்படுத்தலாம். இந்த சாதனத்திற்காக, நிறுவனத்தின் ரூ.699, ரூ.2,099 மற்றும் ரூ.4,199/- திட்டங்கள் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? என்பதை பற்றிய விவரங்களை பார்ப்போம் 

ஜியோலின்க் ரூ.699/-ன் நன்மைகள்.!
இந்த திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த லிமிட்டிற்க்கு பிறகு வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 16 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மாதத்திற்கு 156 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டம் 28 நாட்களுக்கு வெளிடிடியாக இருக்கும் . இதில் எந்தவிதமான கால் அல்லது SMS நன்மைகளை கிடைக்காது . இருப்பினும் , பயனர்களுக்கான ஜியோ ஆப் யில் இலவச சந்தா கனெக்டிவிட்டி கிடைக்கும்.

ஜியோலின்க் ரூ.2099/-ன் நன்மைகள்.!
இந்த திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.  இதில் லிமிட்  மீறினால்  வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 48 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மொத்த வேலிடிட்டி 538 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தின் நன்மைகள் 

இந்த திட்டம் 98 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கும் . இதில் எந்தவிதமான கால் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்காது . எனினும், பயனர்களுக்கான ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா கனெக்டிவிட்டி கிடைக்கும்.

ஜியோலின்க் ரூ.4199/-ன் நன்மைகள்.!
இந்த திட்டத்தின் கீழ் , ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த லிமிட்  மீறினால்  வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 96 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மொத்த வெளிடிடியாகும் 1076 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :