Jio யின் புதிய பிளான் ரூ,857 யில் கிடைக்கும் Prime Video பல மடங்கு நன்மை
இது கஸ்டமர்களுக்கு இப்பொழுது புதிய ரூ,857 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டமானது OTT (over-the-top) நன்மைகளுடன் வருகிறது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்
இந்த புதிய திட்டத்தில், என்டர்டைமென்ட் நன்மைகளுடன், பயனர்கள் 5G வெல்கம் ஆபர் உடன் பெற முடியும்.
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது கஸ்டமர்களுக்கு இப்பொழுது புதிய ரூ,857 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டமானது OTT (over-the-top) நன்மைகளுடன் வருகிறது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்டர்டைமென்ட் திட்டங்களின் லிஸ்ட்டில் இந்த திட்டத்தை ஜியோ சேர்த்துள்ளது. இந்த புதிய திட்டத்தில், என்டர்டைமென்ட் நன்மைகளுடன், பயனர்கள் 5G வெல்கம் ஆபர் உடன் பெற முடியும்.
Jio Rs 857 Plan
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.857 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இது தவிர, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் சந்தா நன்மைகள் வழங்குகிறது.
FUP டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். ஆனால் இங்கே நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது, எனவே நீங்கள் ஜியோவின் 5G கவரேஜ் பகுதியில் வசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் ஃபோன் 5G SA (தனிமையானது) சப்போர்ட் செய்கிறது என்றால், நீங்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை அனுபவிக்க முடியும்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால் திட்டத்துடன் வரும் Amazon Prime Video Mobile Edition 84 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இங்கு வழங்கப்படும் ஜியோ சினிமா அக்சஸ் பிரீமியம் சந்தா அல்ல, வழக்கமான திட்டம் மட்டுமே.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ பாரத் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Rs 234 Plan
ஜியோ பாரத் போன் பயனர்களுக்கு, ரூ.234 திட்டமானது 56 நாட்கள் சேவை செல்லுபடியாகும், 28 நாட்களுக்கு ஒருமுறை 300 SMS தினசரி 0.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களுடன் வருகிறது. இது தவிர, இந்த திட்டத்தில், பயனர்கள் JioSaavn மற்றும் JioCinema ஆகியவற்றின் சந்தாவையும் வழங்குகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு திட்டங்களும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
இதையும் படிங்க Jio யின் புதிய பிளான் வெறும் 234ரூபாயில் 2 மாதங்களுக்கு Free OTT பயன்படுத்த முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile