Reliance Jio அதன் சப்ஸ்க்ரபர்க்ளுக்கு ஒரு புதிய 3333 ரூபாய் கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது, டெலிகாம் நிறுவனம் சத்தமில்லாமல் அதன் போர்ட்போளியோவில் இந்த திட்டத்தை சேர்த்துள்ளது மற்றும் இதில் FanCode யின் இலவச சப்ஸ்க்ரிப்சனுடன் வருகிறது ஃபேன்கோட் என்பது ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீமிங் தளமாகும், இது கிரிக்கெட் மற்றும் கால்பந்து, ஃபார்முலா 1 மற்றும் பிற ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீம் செய்கிறது. இருப்பினும், இந்த தளம் இலவசம் அல்ல.
இதற்கு நீங்கள் ரூ.200 செலவாகும் மாதாந்திர பாஸை வாங்க வேண்டும் அல்லது ரூ.999 விலையுள்ள வருடாந்திர பாஸ் வாங்க வேண்டும். இப்போது, ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டமான ரூ.3333 மூலம், பயனர்கள் இந்தச் சந்தாவை எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல், அதாவது இலவசமாகப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் அனைத்து நன்மைகளும் கீழே பார்க்கலாம்.
Reliance Jio யின் 3333ரூபாய் கொண்ட திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வரும், அதாவது மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஃபேன்கோட் (ஜியோடிவி மொபைல் ஆப் மூலம் வழங்கப்படும்), ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட். ஃபேன்கோட் சந்தா ஆண்டு முழுவதும் கிடைக்கும். பயனர்கள் இங்கு ஜியோ சினிமா பிரீமியம் பெறவில்லை, ஆனால் வழக்கமான ஜியோ சினிமா சந்தாவைப் வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த திட்டத்துடன் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டமானது jio அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீச்சர்ச்ஜ் செய்வதற்க்கு கிடைக்கும் இதேபோன்ற மற்றொரு 2.5 ஜிபி தினசரி டேட்டா திட்டத்தை ஜியோ கொண்டுள்ளது. அந்த திட்டத்தின் விலை ரூ.2999. ஆகும்.
ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகின்றன. இதன் சேவை வேலிடிட்டி காலம் 365 நாட்கள் மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. ரூ.3333 மற்றும் ரூ.2999 திட்டங்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் ஃபேன்கோட் சந்தா மட்டுமே.
எதிர்காலத்தில் ஃபேன்கோடு சந்தாவை எடுக்க நினைத்தால், ஜியோவின் ரூ.3333 திட்டம் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
இதையும் படிங்க Vodafone Idea யின் உலகில் முதல் முறையாக ரூ,1 பிளான் ஜியோவுக்கே டஃப்