Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு Netflix உடன் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜூலை 3, 2024. அதன் பல திட்டத்தின் விலையை அதிகரித்தது இந்தத் திட்டங்களைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவைக் கருத்தில் கொண்டு இந்த டெலிகாம் ஆபரேட்டர் இன்னும் அதிக சலுகைகளை வழங்குகிறது. இந்தியாவில் தனியாக Netflix வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். தற்போது, ஜியோவின் இரண்டு திட்டங்கள் உங்களுக்கு Netflix சந்தாவை வழங்குகின்றன, அவற்றின் விலைகள் ரூ.1299 மற்றும் ரூ.1799 ஆகும். அவற்றின் பலன்களைப் பார்ப்போம். கட்டண உயர்வுக்கு முன் ரூ.1299 மற்றும் ரூ.1799 திட்டங்களின் விலை முறையே ரூ.1099 மற்றும் ரூ.1499 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ,1299 திட்டத்தை பற்றி பேசினால் 84 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதனுடன் தினமும் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் வைஸ் காலுடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் கஸ்டமர்களுக்கு Netflix மொபைல் சப்ஸ்க்ரிசன் வழங்குகிறது. அன்லிமிடெட் 5G டேட்டா, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவை கூடுதல் நன்மைகள் வழங்குகிறது.
ஜியோவின் 1799ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வருகிறது, இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வைஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது. இந்த திட்டத்தில் Netflix Basic, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவை அடங்கும். இரண்டு திட்டங்களிலும் FUP டேட்டாலிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது.
இரண்டு திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இது தவிர, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை நெட்ஃபிக்ஸ் தொகுக்கப்பட்ட திட்டங்களையும் கொண்டுள்ளன. மேலும், நீங்கள் ஜியோவின் இணையதளம் அல்லது மொபைல் செயலியை (MyJio) சென்று அது வழங்கும் பிற பொழுதுபோக்கு திட்டங்களைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Vodafone Idea பயனர்களுக்கு செம்ம மஜா தான் 5GB போனஸ் டேட்டா
மேலும் நீங்கள் ரீச்சார்ஜ் செய்வதற்க்கு இங்கே க்ளிக் செய்யுங்க