ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய வொர்க் ஃபிரம் ஹோம் வருடாந்திர சலுகை மற்றும் புதிய ஆட் ஆன் டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருமடங்கு டேட்டா வவுச்சர்கள் மற்றும் இலவச டேட்டா உள்ளிட்டவற்றை அறிவித்தது.
புதிய வருடாந்திர சலுகையில் முன்பை விட 33 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோவின் புதிய வருடாந்திர சலுகை விலை ரூ. 2399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் சலுகையை வழங்கி வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ மூன்று ஆட் ஆன் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகைகளை ரூ. 151, ரூ. 201 மற்றும் ரூ. 251 விலையில் அறிவித்துள்ளது. இவற்றில் முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது. இவற்றின் வேலிடிட்டி பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது.