ஜியோவின் புதிய ஆட் ஆன் சலுகை முன்பை விட 33 சதவீதம் கூடுதல் டேட்டா,,,
இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய வொர்க் ஃபிரம் ஹோம் வருடாந்திர சலுகை மற்றும் புதிய ஆட் ஆன் டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருமடங்கு டேட்டா வவுச்சர்கள் மற்றும் இலவச டேட்டா உள்ளிட்டவற்றை அறிவித்தது.
புதிய வருடாந்திர சலுகையில் முன்பை விட 33 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோவின் புதிய வருடாந்திர சலுகை விலை ரூ. 2399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 2399 சலுகை மற்றும் ஜியோ ரூ. 151 சலுகை
இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் சலுகையை வழங்கி வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ மூன்று ஆட் ஆன் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகைகளை ரூ. 151, ரூ. 201 மற்றும் ரூ. 251 விலையில் அறிவித்துள்ளது. இவற்றில் முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது. இவற்றின் வேலிடிட்டி பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile