Jio யின் புதிய அன்லிமிடெட் 5G டேட்டா பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி இந்த OTT சப்ச்க்ரிப்சன் இலவசமாக கிடைக்கும்

Jio யின் புதிய அன்லிமிடெட் 5G டேட்டா பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி இந்த OTT சப்ச்க்ரிப்சன் இலவசமாக கிடைக்கும்

Reliance Jio நிறுவனம் ரூ.909க்கு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 5ஜி டேட்டாவுடன் வருகிறது. மேலும், OTT ஆப்களின் சப்ச்க்ரிப்சனும் இதில் கிடைக்கிறது. ஜியோ ரூ.909 என்ற அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அன்லிமிடெட் டேட்டாவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக விளக்குமாறு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில், அன்லிமிடெட் 5G டேட்டா என்பது 30 நாட்களுக்கு அதிகபட்சமாக 300GB டேட்டாவைக் குறிக்கிறது.

Jio 909 ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை

ஜியோவின் ரூ.909 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, 84 நாட்களுக்கு தினமும் அதிகபட்சமாக 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும், இதில் தினமும் 100 SMS வசதியும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் Sony LIV, Zee 5 மற்றும் Jio TV ஆகியவற்றின் இலவச சப்ச்க்ரிப்சன் உங்களுக்கு வழங்கப்படும். இது தவிர, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றில் அக்சஸ் வழங்கப்படும்.

விரைவில் அறிமுகமாகும் 5G ரீச்சார்ஜ் திட்டம்

ஒரு வருடத்திற்கு முன்பு ஜியோவால் 5G நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டது நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது.

இதையும் படிங்க: Airtel Unlimited 5G Data Policy: Airtel பயர்களுக்கு மாதத்திற்கு அன்லிமிடெட் 5G டேட்டா விதி என்ன பாருங்க

தற்போது, ​​ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இலவச 5ஜி டேட்டாவை வழங்குகின்றன. இதற்கு குறைந்தபட்சம் ரூ.249 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அறிக்கையின்படி, 5G ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் விரைவில் தொடங்கலாம். இருப்பினும், ஜியோ மற்றும் ஏர்டெல் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo