Reliance Jio சத்தமில்லாமல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை 198ரூபாயாகும். இது எக்டிவ் சர்விஸ் வேலிடிட்டி உடன் வருகிறது, ஆனால் இது ஷோர்ட் ஒன் திட்டத்துடன் அதிகபட்ச வேலிடிட்டியை வழங்குகிறது, இந்த திட்டமானது அதிகபட்ச டேட்டா விருபுவோர்களுக்கு இந்த திட்டம் மிக சிறந்ததாக இருக்கும். இந்த திட்டம் நிச்சயமாக ஜியோ ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க உதவும். 200 ரூபாய்க்கு கீழ் ஒரு புதிய திட்டம் தொலைத்தொடர்பு ஆபரேட்டரிடமிருந்து ஒரு சுவாரஸ்யமான நடவடிக்கையாகும். மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மை என்ன என்பதை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை 198ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டமாகும் இதன் வேலிடிட்டி 14 நாட்களின் சர்விஸ் வேலிடிட்டி ஆகும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் கூடுதலாக JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை வழங்கப்படுகிறது.
Jio யின் ரூ,199 திட்டத்தில் 18 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தில் 1.5GB யின் தினசரி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தில் JioCinema, JioTV, மற்றும் JioCloud நன்மை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.200க்கு கீழ் உள்ள மற்றொரு திட்டமானது ரூ.189 ஆகும். இது தற்போது தொலைத்தொடர்பு நிறுவனத்தால் வழங்கப்படும் குறைந்த விலை சேவை வேலிடிட்டி திட்டமாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS ஆகியவற்றைப் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 28 நாட்கள். ஜியோ ஆப்களும் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் 5G நன்மையையும் வழங்குகிறது அதாவது, இது நாட்டிலேயே மலிவான சேவை செல்லுபடியாகும் திட்டமாகும், இது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G சேவையையும் வழங்குகிறது.
இதையும் படிங்க: BSNLயின் செம்ம மஜாவான பிளான் 160 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்