Reliance Jio நிறுவனம் அதன் புதிய JioNews சேவையை அறிவித்துள்ளது, இனி உங்களுக்கு கிடைக்கும் அதிக அப்டேட்

Updated on 12-Apr-2019
HIGHLIGHTS

இந்த புதிய சேவையின் கீழ் இதன் மூலம் லேட்டஸ்ட் நியூஸ் ஆப் வெப் மூலமும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ்  ஜியோ  காலடி  வைத்ததிலிருந்து  டெலிகாம்  நிறுவனத்தை  கலக்கி கொண்டி இருக்கிறது  என்பது  நமக்கு தெரிந்தவையே, மேலும்  ஜியோ  நிறுவனம்  மக்களுக்கு  ஒவ்வொரு தகவலும்  உடனுக்குடன்  வழங்க அதன்  JioNews   சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் கீழ் இதன் மூலம் லேட்டஸ்ட் நியூஸ்  ஆப்  வெப் மூலமும் வழங்கப்படுகிறது.

மேலும் புதிய சேவையின் முலம் jionews.com இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.ioNews நிறுவனம் ஒரு புதிய  சமீபத்திய மற்றும் பிரியமான செய்தி, லைவ் டிவி, வீடியோக்கள், மேக்சின் , செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து வேறுபட்ட உள்ளடக்கம் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கப் போகிறது. மேலும் இதில் பாராளுமன்ற தேர்தல் 2019, ஐபிஎல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 மற்றும் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற முக்கிய நிகழ்வுகள் என அனைத்து செய்திகளையும், ஒரே இடத்தில் பெற வழி வகுக்கின்றது.

இதை தவிர  இதில் உங்களுக்கு  150+ லைவ் சேனல் மேலும் 800க்கு மேற்பட்ட  மேக்சின் மற்றும் இதனுடன் , 250+ அதிகமான செய்தித்தாள்கள் மற்றும் பல  செய்தி  தொகுப்புகளை அதன்  இணையதளம் மூலம் அறியலாம். இதனுடன் இதில் இந்தியா  மட்டும்மின்றி  உலக  செய்திகளையும் இங்கு அறியலாம். 

மேலும் நீங்கள்  இந்த சேவையின் லாபத்தை ஆண்ட்ராய்டு  தவிர IOS  யிலும் பெறலாம், இதனுடன்  இதில் jionews.com  இணையத்தளம் மூலம்  நீங்கள் எளிதாக அறியலாம்  மேலும் நீங்கள்  ஜியோ  பயனராக இருந்தால்  இந்த சேவை முற்றுலும்  இலவசமாக  பெறலாம், இதனுடன் நீங்கள்  ஜியோ  பயனராக இல்லை  என்றால்  இந்த சேவை உங்களுக்கு 90 நாட்களுக்கு  மட்டுமே இலவசமாக  பெற முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :