Jio 3 சூப்பர் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா உடன் இலவச OTT

Jio 3 சூப்பர் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா உடன் இலவச OTT
HIGHLIGHTS

Reliance Jio நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 விலையில் வழங்கப்பட்டுள்ளது

. இந்தத் திட்டங்களில் நீங்கள் சில பெரிய OTT பிளாட்பார்ம்களுக்கான அக்சஸ் வழங்குகிறது

isney+ Hotstar, ZEE5 மற்றும் SonyLIV போன்றவை அடங்கும்

ஜூலை 2024 யின் தொடக்கத்தில், அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன என்பது உங்களுக்கு தெரியும், மேலும் இந்த நடவடிக்கையை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் APRU ஐ அதிகரிக்கச் செய்தன என்றும் கூறலாம் இருப்பினும், இந்த செய்தி வந்த பிறகு, jio , Airtel மற்றும் Vodafone idea கஸ்டமர்களுக்கான ரீசார்ஜ் செலவு அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அது அவரது பாக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது

இந்த நடவடிக்கைக்குப் பிறகு, நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது கஸ்டமர்களை கவருவதில் மும்முரமாக உள்ளது. இதேபோல், ரிலையன்ஸ் ஜியோ தனது கஸ்டமர்களுக்காக மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று நாம் இந்த ப்ரீபெய்ட் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்

Jio யின் புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை

Reliance Jio நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 விலையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் நீங்கள் சில பெரிய OTT பிளாட்பார்ம்களுக்கான அக்சஸ் வழங்குகிறது இதில் Disney+ Hotstar, ZEE5 மற்றும் SonyLIV போன்றவை அடங்கும். கீழே உள்ள மூன்று திட்டங்களின் விரிவான தகவலைப் பெறலாம்.

Jio யின் 329ரூபாய் கொண்ட திட்டத்தில் என்ன நன்மை.

ஜியோவின் 329ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால்,, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா எக்சஸ் வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் அக்சஸ் நன்மை வழங்குகிறது நீங்கள் எந்த நெட்வர்க்கில் கால் செய்தாலும் இலவசம் தான், இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது, இதில் OTT ஸ்ட்ரீமிங் நன்மையாக Jio Saavn Pro மூலம், நீங்கள் JioTV, JioCloud மற்றும் JioCinema க்கான அக்சஸ் வழங்குகிறது.

Jio யின் 949 ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.949க்கு வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் வைஸ் காலின்குடன் வருகிறது, இதில் பயனர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் இலவசமாக அழைக்கலாம். இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவார்கள். மேலும், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையைப் பெறுவீர்கள். இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT பற்றி பேசுகையில், பயனர்கள் Disney + Hotstar யின் மொபைல் வெர்சன் 90 நாட்களுக்கு இலவசமாகப் பெறுவார்கள்.

Jio யின் 1049 ரூபாய் கொண்ட திட்டம்

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.1,049க்கு வருகிறது. ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்திலும், பயனர்கள் 84 நாட்கள் வேளிடிட்டியாகும் இது தவிர, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , இலவச ரோமிங் போன்ற பலன்கள் கிடைக்கும். மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS நன்மைகளைப் பெறுவார்கள். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT ஆப்களை பற்றி பேசுகையில், பயனர்கள் திட்டத்தில் Zee5 மற்றும் SonyLIV ஆப்களின் இலவச சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio யின் தினமும் 2.5GB டேட்டா டேட்டாக்கு பஞ்சமில்லை அன்லிமிடெட் 5G நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo