Jio யின் இந்த திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி உடன் 540GB வரையிலான டேட்டா

Updated on 08-Jan-2024
HIGHLIGHTS

Reliance Jio தனது ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

டெலிகாம் விற்பனையாளரிடமிருந்து ரூ.2545க்கு செயல்படுத்தலாம்.

இதில், பயனர் தினசரி அடிப்படையில் 1.5 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது

Reliance Jio தனது ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் நீண்ட கால திட்டங்களில் பல திட்டங்களைச் சேர்த்துள்ளது. மாதாந்திர திட்டத்தின் நீண்ட நாள் ஒரு திட்டத்தை பற்றி பார்க்கலாம். இதில், தினசரி அடிப்படையில் டேட்டாவும் கிடைக்கும் மற்றும் சில இலவச ஆப்ஸின் சந்தாவும் கிடைக்கும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Reliance Jio 2545 கொண்ட திட்டத்தின் நன்மை

ரிலையன்ஸ் ஜியோ தனது நீண்ட கால திட்டங்களை சமீபத்தில் அப்டேட் செய்துள்ளது இவற்றில், நிறுவனம் 336 நாட்கள் வேலிடிட்டியை குறைந்த விலை திட்டத்தைச் சேர்த்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது அருகிலுள்ள டெலிகாம் விற்பனையாளரிடமிருந்து ரூ.2545க்கு செயல்படுத்தலாம். இதில், பயனர் தினசரி அடிப்படையில் 1.5 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது மொத்த டேட்டா நன்மையைப் பார்த்தால், நிறுவனம் 540 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஹை ஸ்பீட் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps வரை மட்டுமே இருக்கும். ஆனால் இன்டர்நெட் கனெக்சன் இன்னும் உள்ளது என்பதும் ஒரு நல்ல விஷயம். தகுதியான வாடிக்கையாளர்கள் திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது.

இதையும் படிங்க :iQoo Neo 7 விலை இந்தியாவில் அதிரடியாக குறைப்பு

ஜியோவின் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மையுடன் வருகிறது. பயனர் அன்லிமிடெட் லோக்கல் /STD கால்களை செய்யலாம். ஜியோ ப்ரீபெய்ட் திட்டமும் உங்களுக்கு சில பாராட்டு பலன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர் இலவச OTT பயன்பாடுகளான JioTV, JioCinema, JioCloud ஆகியவற்றின் சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது.

டிவி கண்டெண்டை ஜியோடிவியில் பார்க்கலாம். நீங்கள் மூவீகளை பார்க்க விரும்பினால், இந்த பேக்குடன் JioCinema சப்ச்க்ரிசன் வழங்குகிறது இது திட்டத்தின் வேலிடிட்டியாகும் வரை ஜியோ சினிமா பிரீமியத்தின் சப்ஸ்க்ரிப்சன் நிறுவனம் சேர்க்கவில்லை என்பதை இங்கே கவனிக்கவும். இது தவிர, Jio திட்டத்தில் கிடைக்கும் JioCloud கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை நீங்கள் பார்வையிடலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :