Jio யின் ரூ,2999 ரீச்சார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் 3000ரூபாய்க்கும் அதிகமான பல நன்மை
Jio Republic Day ஆபராக ரூ,2999 கொண்ட இந்த திட்டத்தில் கூடுதல் நன்மை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும், மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா கிடைக்கும்
ரூ.2999 வருடாந்திர திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.3250க்கு மேல் மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும்
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் தற்பொழுது Republic Day ஆபராக ரூ,2999 கொண்ட இந்த திட்டத்தில் கூடுதல் நன்மை வழங்கப்படுகிறது. ரூ,2999 கொண்ட இந்த திட்டத்தில் இது போன்ற பல நன்மை வழங்கப்பட்டு வருகிறது, சமிபத்தில் நியூ இயர் சலுகையாக கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்கியது அந்த வகையில் இப்பொழுது ரூ,2999 திட்டத்தில் Republic Day 2024க்கான சலுகையை அறிவித்துள்ளது அப்படி இதில் என்ன என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
Reliance Jio Republic Day Offer with Rs 2999 Plan
Jio Republic day offer ஜியோ தனது வருடாந்திர திட்டத்தில் சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும், மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா உடன் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது குடியரசு தின சலுகை என்று ஜியோ அறிவித்துள்ளது. ரூ.2999 வருடாந்திர திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.3250க்கு மேல் மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த கூப்பன்கள் ஷாப்பிங், பயணம் மற்றும் உணவு கட்டணங்களை செலுத்த பயன்படுத்தப்படலாம். இந்த கூப்பன்கள் AJio, Tira, Ixigo, Swiggy மற்றும் Reliance Digital போன்றவற்றிலிருந்து கிடைக்கும். இந்த சலுகை ஜனவரி 15 முதல் 31 வரை மட்டுமே வேளிடிட்டியாக இருக்கும்.
வாடிக்கையாளர்கள் ரூ.2499 ரீச்சார்ஜ் செய்தால் AJioவில் ரூ.500 தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோ கூறுகிறது. அதேபோல், Tira யில் 30 சதவீத தள்ளுபடி கிடைக்கும், இதன் லிமிட் ரூ.1,000. மேல் இந்தால் மட்டுமே இந்த ஆபரை பெற முடியும் இக்ஸிகோவில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதன் மூலம் ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம். ஸ்விக்கியில் உணவை ஆர்டர் செய்தால் 250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, ரிலையன்ஸ் டிஜிட்டலில் 10% தள்ளுபடி வழங்கப்படும்.
ஜனவரி 15 முதல் ஜனவரி 31 வரை 2999 ரூபாய்க்கான வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் ஜியோவின் திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன், அவர் பெறும் கூப்பன்கள் MyJio ஆப் யில் தோன்றத் தொடங்கும். கூப்பன் கோட்களை காப்பி செய்து இந்த ஆபரை பயன்படுத்தலாம்
இதையும் படிங்க : BSNL யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் வேலிடிட்டி, 40GB டேட்டா இது வெறும் தமிழ்நாடு மக்களுகாகும்
அதிகபட்ச கூப்பன்களைப் பெற, மக்கள் தங்கள் நம்பரில் எத்தனை ரீசார்ஜ்களை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஜியோ கூறியுள்ளது. சலுகையின் கீழ் வென்ற கூப்பன்களை வேறொரு ஜியோ நம்பருக்கு மாற்ற முடியாது. இருப்பினும் அவற்றை நண்பர்கள்/குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile