Reliance Jio சமீபத்தில் JioTV பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த வகையில் ரூ.148, ரூ.398, ரூ.1198 மற்றும் ரூ.4498 ஆகிய நான்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள் ரூ.1198 திட்டத்தில் போனஸ் டேட்டாவைப் வழங்குகிறது . இந்த திட்டத்தில் கிடைக்கும் போனஸ் டேட்டா 18ஜிபி ஆகும், இது தலா 6ஜிபி அளவிலான மூன்று டேட்டா வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்கள் MyJio ஆப் யில் உள்ள பயனரின் பதிவு செய்யப்பட்ட அக்கவுண்டிற்க்கு அனுப்பப்படும். இந்த திட்டத்துடன், வாடிக்கையாளர்கள் ஜியோடிவி பிரீமியத்தின் சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது , இது பல பெரிய OTT நன்மைகளைக் கொண்டுவருகிறது. இந்த திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பார்ப்போம்.
Reliance Jio ரூ,1198 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் உடன் தினமும் 100 SMS மற்றும் 2GB டேட்டா உடன் வருகிறது தற்போது உங்களுக்கு 18ஜிபி போனஸ் டேட்டாவும் வழங்கப்படுகிறது. பிரைம் வீடியோ மொபைல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, DocuBay, EpicON, SunNXT, Hoichoi, Chaupal, Planet Marathi மற்றும் Kanchha Lannka ஆகியவை இந்த பேக்குடன் இணைந்த ஜியோ டிவி பிரீமியம். தவிர, JioTV மற்றும் JioCloudக்கான அக்சஸ் திட்டத்தில் கிடைக்கிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும், அதே நேரத்தில் பிரைம் வீடியோ மொபைல் எடிசன் மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் 84 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த மூன்று OTTகளின் கன்டென்ட் அவற்றின் தளங்களில் கிடைக்கும், மற்ற OTT இயங்குதளங்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க, பயனர்கள் JioTV ஆப்பிற்க்கு செல்லலாம்.
இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. FUP தரவு பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். இந்த அனைத்து OTT பிளாட்பார்மில் தங்கள் மொபைல் ப்ரீபெய்ட் திட்டத்துடன் அணுக விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சிறந்தது.
இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது அசத்தலான அம்சம் பிடித்த நம்பருக்கு உடனே கால் செய்ய முடியும்