ஜியோவின் அசத்தலான ஆபர் ஒரே கனெக்சனில் டிவி,போன்,இன்டர்நெட் எல்லாமே பெறலாம்.

ஜியோவின் அசத்தலான ஆபர் ஒரே கனெக்சனில் டிவி,போன்,இன்டர்நெட்  எல்லாமே பெறலாம்.
HIGHLIGHTS

இந்த சேவையின் கீழ் 100 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனைத்து ஜியோ ஆப்களும் முற்றிலுமாக இலவசம்.

ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை  இப்பொழுது ஒரு சில குருதிப்பிட்ட நகரங்களில் வழங்கப்படுகிறது.மேலும் ஜியோ  பயனர்களுக்கு  மிகவும்  பயன்படும் வகையில்   இன்டர்நெட் – டிவி – போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த  சேவை  தற்பொழுது  சோதனை செய்யப்பட்டு வருகிறது மேலும் விரைவில்  இது அனைத்து நகரங்களுக்கு  வரும் என கூறப்படுகிறது.மேலும் தற்பொழுது இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன

மேலும் நாம்  முதலில் பார்த்ததை போல  ஜிகா ஃபைபர்  4500 ரூபாய் லிருந்து 2500ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. என நாம்  பார்த்தோம்.

50Mbps வேகத்தில் செயல்படும் இன்டர்நெட் சேவையை பெற ரூ. 600 கட்டணமாகும் என்றும் 100Mbps வேகத்தில் இயங்கும் மேலும் இன்டர்நெட் சேவையைப் பெற ரூ. 1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் வருடாந்திர ஜியோ மாநாட்டில் அதிகாரப்பூர்வ கட்டண அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100Mbps வேகம் கொண்ட Reliance JioGigaFiber இன்டெர்நெட் சேவை
டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் முன்பணம் செலுத்தி ப்ரிவியூ ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் ப்ரிவ்யூ சேவையை அறிமுகம் செய்தனர் ஜியோ. டிவி மற்றும் வாய்ஸ் சேவைகள் இன்னும் ப்ரிவ்யூ சேவைகளில் அறிமுகம் ஆகவில்லை.

இந்த சேவையின் கீழ் 100 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனைத்து ஜியோ ஆப்களும் முற்றிலுமாக இலவசம்.

Reliance JioGigaFiber விலை 
50Mbps வேகம் கொண்ட சேவைக்கான கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ. 600 ஆகும். 100Mbps வேகம் கொண்ட சேவைக்கான கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ. 1000 ஆகும். இந்த இரண்டு சேவைகளிலும் 100ஜிபி டேட்டா தான் லிமிட் ஆகும். கொடுக்கப்பட்ட டேட்டா முடிவுற்றால் மை ஜியோ ஆப் (JioApp) அல்லது Jio.com இன்டெர்நெட் தளத்திற்கு சென்று 40 ஜிபி வரை ரிச்சார்ஜ்  செய்து கொள்ளலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo