Relience Jio மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 51 நாடுகளுக்குச் செல்லும் பயனர்களுக்காக இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நிறுவனம் விமானத்தில் சேவையை தொடங்கியுள்ளது. மேலும், இந்த இண்டர்நேசனல் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.195 முதல் தொடங்குகிறது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்…
ஜியோவின் ரூ.195 திட்டத்தில், 250 எம்பி டேட்டாவுடன் 100 நிமிட வொயிஸ் காலுடன் 100 SMS வசதியும் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.295 திட்டம் 100 நிமிடங்கள் மற்றும் 100 SMS மற்றும் 500எம்பி டேட்டாவை வழங்கும்.
ஜியோவின் ரூ.595 திட்டமானது 1ஜிபி டேட்டாவுடன் 100 நிமிட வொயிஸ் காலுடன் 100 SMS வசதியையும் வழங்கும்.
இந்த மூன்று திட்டங்களும் 1 வருட வேலிடிட்டி நன்மை உடன் வருகிறது.
ஜியோ ரூ.2499க்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 10 நாட்கள் வேலிடிட்டியாகும் மேலும், 250 எம்பி தினசரி டேட்டா மற்றும் தினசரி 100 SMS உடன் 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இலவச காலிங் வசதியும் உள்ளது. இந்த திட்டம் 35 நாடுகளில் செயல்படும்.
ஜியோவின் ரூ.4,999 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் மேலும், 5 ஜிபி டேட்டா மற்றும் 1500 SMS வசதியும் உள்ளது. இந்த திட்டம் 100 நிமிடங்கள் அவுட்கோயிங் மற்றும் இலவச இன்கம்மிங் காலிங் வசதியை வழங்குகிறது.
ஜியோவின் ரூ.3,999 திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். இது 4 ஜிபி டேட்டாவுடன் 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இலவச இன்கம்மிங் கால் வசதியை வழங்குகிறது. இது 100 SMS வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 51 நாடுகளில் செயல்படும்.
ஜியோவின் ரூ.5999 திட்டத்தில் 30 நாட்களுக்கு மொத்தம் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், 500 SMS வசதியும் உள்ளது. 400 உள்ளூர் இந்தியா, உள்வரும் மற்றும் ROW காலிங் வசதி உள்ளது.
இந்த திட்டம் ஒரு வருடாந்திர திட்டமாகும் இதன் விலை 2799 ரூபாயில் வருகிறது. இது 100 நிமிட வொயிஸ் அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் கால்களை வழங்கும். போனில் 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இது தவிர, 100 எஸ்எம்எஸ் அவுட்கோயிங் SMS வசதியும் கிடைக்கும். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டம் 51 நாடுகளில் கிடைக்கும்.
இதையும் படிங்க: Jio கஸ்டமர்களுக்கு இந்த இரு ப்ரீ பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் டேட்டா
குறிப்பு :- விமானத்தில் உள்ள பலன்கள் 24 மணிநேரத்திற்கு ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.