Jio இந்த பாப்புலர் ரீச்சார்ஜ் திட்டத்தை அதிரடியாக நீக்கியுள்ளது

Jio இந்த பாப்புலர் ரீச்சார்ஜ் திட்டத்தை அதிரடியாக நீக்கியுள்ளது
HIGHLIGHTS

Reliance Jio அதன் திட்டத்தின் விலையை ஜூலை 3, 2024. முதல் அதிகரித்துள்ளது,

jio பல OTT ப்ரீபெய்ட் திட்டங்களையும் மற்றும் டேட்டா வவுச்சர் திட்டங்களையும் நீக்கியுள்ளது

SonyLIV, Disney+ Hotstar மற்றும் ZEE5 யின் அதிகபட்சமான OTT திட்டத்தை நீக்கியுள்ளது.

Reliance Jio அதன் திட்டத்தின் விலையை ஜூலை 3, 2024. முதல் அதிகரித்துள்ளது, இருப்பினும் இதில் அதிக திட்டத்தின் விலை அதிகரிக்கவில்லை, ஆனால் ஒரு சில திட்டங்களை நீக்கப்பட்டது அதை இனி கஸ்டமர்கள் இதை எங்குமே ரீச்சார்ஜ் செய்யவே முடியாது. மேலும் jio பல OTT ப்ரீபெய்ட் திட்டங்களையும் மற்றும் டேட்டா வவுச்சர் திட்டங்களையும் நீக்கியுள்ளது. இந்த திட்டத்தின் விலையை உயர்த்தவில்லை ஆனால் இதை நேரடியாக லிஸ்டிளிருந்தே நீக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் திரும்ப வருமா என்பதும் தெரியவில்லை சரி நிறுவனம் அப்படி என்ன திட்டங்களை நீக்கியுள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

Jio யின் இந்த திட்டம் நீக்கியுள்ளது
Jio Rs 3,226 Plan – 365 Days – 2GB Per Day – Sony LIV
Jio Rs 3,225 Plan – 365 Days – 2GB Per Day – ZEE5
Jio Rs 2,999 Plan – 365 Days – 2.5GB Per Day
Jio Rs 909 Plan – 84 Days – 2GB per Day – Sony LIV and ZEE5
Jio Rs 806 Plan – 84 Days – 2GB Per Day – Sony LIV
Jio Rs 805 Plan – 84 Days – 2GB Per Day – ZEE5
Jio Rs 3178 plan – 365 days, 2GB per day – Disney+ Hotstar
Jio Rs 3,662 Plan – 365 Days – 2.5GB Per Day – Sony LIV and ZEE5
Jio Rs 3227 Plan – 365 days, 2GB per day – Prime Video

அதாவது இதன் அர்த்தம் SonyLIV, Disney+ Hotstar மற்றும் ZEE5 யின் அதிகபட்சமான OTT திட்டத்தை நீக்கியுள்ளது.

Jio தினமும் 1.5GB டேட்டா கொண்ட வருட திட்டத்தையும் நீக்யுள்ளது

தினசரி 1.5 ஜிபி டேட்டா அல்லது 2 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் வருடாந்திர பேக்குகளை ஜியோ நீக்கியது. கட்டண உயர்வுக்கு முன் ரூ.2545 அல்லது ரூ.2999 போன்ற பிரபலமான திட்டங்கள் உயர்வைக் காணவில்லை மற்றும் அகற்றப்பட்டன. ரூ.1559 திட்டம் ரூ.1899 விருப்பமாக மாறியது. மேலும், இந்த முறை, அன்லிமிடெட் 5G டேட்டா வவுச்சர் இல்லை. எனவே ரூ.61 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டம் இப்போது ரூ.69 திட்டமாக உள்ளது ஆனால் இதிலும் 5G கிடையாது .

இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட திட்டங்களில் JioTV பிரீமியம் சந்தாவுடன் வந்த பல விருப்பங்களை Jio நீக்கியது. இதுபோன்ற நான்கு திட்டங்கள் இருந்தன, ஆனால் இப்போது ஒன்று மட்டுமே உள்ளது, அதுவும் டேட்டா வவுச்சர். ரூ.398, ரூ.4498 மற்றும் ரூ.1198 ஜியோடிவி பிரீமியம் திட்டங்கள் ஜியோவால் அகற்றப்பட்டுள்ளன.

இதை தவிர jio அதன் ரூ,331 கொண்ட திட்டத்தையும் நீக்கியுள்ளது, இதில் 40GB யின் டேட்டா உடன் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் Disney+ Hotstar சப்ச்க்ரிப்சன் கிடைத்தது

மேலும் இதில் டேட்டா வவுச்சர் திட்டங்களும் காணவில்லை அதில் ரூ,555 யில் வரும் திட்டத்தில் 55 நாட்கள் வேலிடிட்டியுடன் 55GB டேட்டா வழங்கப்பட்டது அதே போல் ரூ,2878 திட்டத்தில் தினமும் 2GB டேட்டா மற்றும் ரூ,667 திட்டத்தில் 150GB டேட்டா வழங்கப்பட்டது அந்த திட்டங்களும் இப்பொழுது காணவில்லை கடைசியாக ரூ,444 யில் வரும் திட்டம் 100GB டேட்டா நன்மையுடன் கிடைத்தது இப்பொழுது அதும் இனி கிடைக்காது

Jio இந்த திட்டத்தை திரும்ப கொண்டு வருமா என்பதை பற்றி தெரியவில்லை எதிகாலத்தில் இந்த திட்டம் திரும்ப வரலாம், வராமலும் போகலாம்.

இதையும் படிங்க:Vi கஸ்டமரா நீங்க, அப்போ இதன் ரீச்சார்ஜ் திட்டம் எவ்வளவு உயர்வு பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo