ஜியோ வழங்குகிறது ஒரு ரிச்சார்ஜில் லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள்.

Updated on 24-Apr-2019
HIGHLIGHTS

ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் டிவிகள் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.

தற்சமயம் இந்த சேவை செலக்ட் செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :