ஜிகாஃபைபர் ப்ரிவ்யூ சலுகையில் 100ஜிபி டேட்டா கிடைக்கும்…!

ஜிகாஃபைபர்  ப்ரிவ்யூ சலுகையில் 100ஜிபி  டேட்டா கிடைக்கும்…!
HIGHLIGHTS

ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் மூன்று மாத காலத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது வாருங்கள் பார்ப்போம் அதி பற்றிய விவரங்களை

ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சேவை இன்னும் முழுமையாக அனைவருக்கும் வழங்கப்படவில்லை. எனினும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஜியோஃபைபர் பிரீவியூ சலுகை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்படும் போதும் இதேபோன்ற பிரீவியூ சலுகைகள் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்தது .

https://static.digit.in/default/229d9b9d4dd2226a320ad1b437bff17232065131.jpeg

ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் மூன்று மாத காலத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர்கள் ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 முன்பணம் செலுத்தி சேவைகளை பெறலாம். முதல் மூன்று மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சலுகைகளை பெற முடியும்.

https://static.digit.in/default/3d23e693b7c9d52e4acb5550f0bac90289145d4a.jpeg

வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் அதிகளவு முன்பதிவு பெறும் நகரத்தில் சேவை முதலில் துவங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ டெலிகாம் சேவையில் ஆறு மாத காலம் இலவச பிரீவியூ சலுகை வழங்கப்பட்ட நிலையில், ஜிகாஃபைபர் சலுகையிலும் இலவச பிரீவியூ சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட டேட்டா மட்டுமின்றி கூடுதல் டேட்டா பெற டேட்டா டார்-அப் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்கள் அதிவேக பிராட்பேன்ட் சேவையை சீராக பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேட்டா டாப்-அப் சலுகையிலும் குறைந்தபட்சம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

https://static.digit.in/default/1e595a375bbb662e7f06f65695363029357c7011.jpeg

முன்னதாக வெளியான தகவல்களில் டேட்டா டாப்-அப்களை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25 முறை பயன்படுத்த முடியும், இதனால் அதிகபட்சம் 1100 ஜிபி டேட்டா பெற முடியும். கடந்த வெளியான புகைப்படங்களின் படி பிரீவியூ சலுகை சார்ந்த விவரங்கள் தெரியவந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo