2000 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய ஜியோ ஃபைபர் டேட்டா வவுச்சர் அறிமுகம்.
ஜியோ வலைத்தளம் அல்லது மைஜியோ செயிலியில் சைன் இன் செய்தது புதிய டேட்டா வவுச்சர்களை ஜியோ ஃபைபர் கட்டண வாடிக்கையாளர்கள் இயக்க முடியும்.
ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வவுச்சர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 101 முதல் துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஜியோ வலைத்தளம் அல்லது மைஜியோ செயிலியில் சைன் இன் செய்தது புதிய டேட்டா வவுச்சர்களை ஜியோ ஃபைபர் கட்டண வாடிக்கையாளர்கள் இயக்க முடியும்.
ஜியோ ஃபைபர் சலுகைகளை போன்று இல்லாமல் டேட்டா வவுச்சர்களில் எவ்வித கூடுதல் வேலிடிட்டியும் வழங்கப்படவில்லை. எனினும், இவற்றை டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். டேட்டா வவுச்சர்களில் ஜியோ அதிகபட்சமாக 2000 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இவற்றின் கட்டணம் ரூ. 101 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 4001 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரு வவுச்சர்கள் தவிர ரூ. 251, ரூ. 501, ரூ. 1001 மற்றும் ரூ. 2001 விலைகளிலும் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. புதிய டேட்டா வவுச்சர்கள் ஜியோ ஃபைபர் சலுகையின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. மேலும் சலுகையின் டவுன்லோடு வேகங்களிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
ஜியோ வலைத்தளம் மற்றும் மைஜியோ செயலியில் உள்ள தகவல்களின் படி ஏற்கனவே உள்ள ஜியோ ஃபைபர் அக்கவுண்ட்டிற்கு மொத்தம் ஆறு டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. இவை டேட்டா வவுச்சர்கள் பிரிவில் காணப்படுகின்றன. ரூ. 101 விலையில் கிடைக்கும் வவுச்சரில் 20 ஜி.பி. டேட்டாவும், விலை உயர்ந்த ரூ. 4001 வவுச்சரில் 2000 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிகபட்சம் 40 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்பட்டது. எனினும், தற்சமயம் இதுபோன்று இலவச டேட்டா வவுச்சரை ஜியோ ஃபைபர் வழங்குவதில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile