jio with JioHotstar
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும் ஜியோவின் இந்த அன்லிமிடெட் ஆபர் நன்மை ஏப்ரல் 15, 2025. வரை நீடிக்கப்பட்டுள்ளது, இந்த சலுகை ஜியோ மார்ச் 2025 நடுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த ஆபர் நன்மை மார்ச் 31, 2025 வரை இருந்தது ஆனால் இப்பொழுது வேலிடிட்டி ஏப்ரல் 15, 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
Reliance Jio, யின் இந்த திட்டத்தில் JioHotstar நன்மையுடன் வருகிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க இந்த திட்டத்தின் விலை ரூ,949, ரூ,195, மற்றும் ரூ,100 யில் வருகிறது இந்த மூன்று திட்டமானது மார்ச் 31, 2025 வரை மட்டும் இருக்கும் என கூறி இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மை ஏப்ரல் 15, 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டமானது டேட்டா வவுச்சர் திட்டமாகும்
Reliance Jio கஸ்டமர்கள் உடன் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இப்போது ஜியோஹாட்ஸ்டார் மொபைலின் 90 நாட்கள் சந்தாவை இலவசமாகப் வழங்குகிறது. இந்த சப்ஸ்க்ரிப்சன் பயன்படுத்தி, பயனர்கள் IPL (இந்தியன் பிரீமியர் லீக்) 2025 ஐப் பார்க்கலாம். சமீபத்தில், ஜியோஹாட்ஸ்டார் 100 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தும் பயனர் தளத்தைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. இது ஜியோஹாட்ஸ்டார் பணம் செலுத்தும் சந்தாதாரர் தளத்துடன் நாட்டின் மிகப்பெரிய OTT (ஓவர்-தி-டாப்) தளமாக மாறுகிறது.
இந்த Jio அன்லிமிடெட் ஆபர் பழைய மற்றும் புதிய கஸ்டமர்கள் இந்த நன்மையை பெறலாம், 28 நாட்கள்/1 மாதம்/30 நாட்கள் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், தங்கள் தற்போதைய திட்டம் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் தகுதியான திட்டத்துடன் (ரூ.299க்கு மேல் அல்லது ரூ.299 திட்டம்) மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும், இதனால் அவர்கள் ஜியோஹாட்ஸ்டார் அக்சஸ் தொடர்ந்து பெற முடியும்.
இதையும் படிங்க:Jio யின் இந்த ஆபர் இன்றுடன் முடிவடைகிறது இனி இந்த நன்மை கிடைக்காது