இனி டேட்டா முடியுமோ என்ற டென்சன் இல்லை Jio Booster Plan குறைந்த விலையில் கிடைக்கும் பல நன்மை
ஜியோ ஏர்ஃபைபர் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.401 திட்டத்தை வழங்குகிறது.
ரூ.401 திட்டத்தில், நீங்கள் புதிய கனேக்சனை செயல்படுத்த முடியாது.
ஜியோவின் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
Reliance Jio வின் 5G FWA பிக்ஸ்ட் வயர்லெஸ்அக்சஸ் ) சேவையான ஜியோ ஏர்ஃபைபர் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.401 திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் வழக்கமான விருப்பம் அல்ல. இதன் பொருள் நீங்கள் இந்த திட்டத்திற்கு சப்ஸ்க்ரைப் செய்ய விரும்பினால், முதலில் நீங்கள் ஜியோ AirFiber வழக்கமான திட்டங்கள் (ரூ. 599, ரூ. 899, ரூ. 1199) அல்லது ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்களில் (ரூ. 14999, ரூ. 2499, ரூ. 3999) ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சன் செயலில் வைத்திருக்கும். இருப்பினும், ரூ.401 திட்டத்தில், நீங்கள் புதிய கனேக்சனை செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்த திட்டம் ஒரு டேட்டா பூஸ்டர் மட்டுமே. ஜியோவின் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
Jio AirFiber Rs 401 Plan
ஜியோ ஏர்ஃபைபரின் ரூ.401 திட்டமானது 1TB டேட்டாவுடன் வருகிறது மற்றும் சிங்கிள் பில்லிங் சைக்கில் வேலிடிட்டியாகும் அதாவது புதிய பில்லிங் சைக்கிள் உங்கள் திட்டம் தொடங்கியவுடன், உங்கள் டேட்டா பூஸ்டர் முடிவடையும், மீதமுள்ள டேட்டாவும் இல்லாமல் போகும். கூடுதல் டேட்டாவை நீங்கள் விரும்பினால், டேட்டா பூஸ்டர் திட்டத்துடன் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இருப்பினும், திட்டத்தில் வழங்கப்படும் FUP டேட்டா மாதத்திற்கு 3.3TB என்பதால் கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். 100 Mbps வரையிலான ஸ்பீடை வழங்கும் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்படாது.
AirFiber எங்கு எங்கு உள்ளது
இந்தியாவில் 21 மாநிலங்களில் உள்ள 494 நகரங்கள்/நகரங்களில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை இப்போது கிடைக்கிறது. ஜியோ இந்த மாதத்தில் அதிக நகரங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ 2023க்குள் 5ஜியை வெளியிட இலக்கு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஜியோ ஏர்ஃபைபர் கனேக்ச்னை முன்பதிவு செய்ய, நீங்கள் ஜியோ ஏர்ஃபைபர் வெப் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.
இதையும் படிங்க:Huawei Enjoy 70 ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile