Jio யின் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி 730 GB வரையிலான டேட்டா கிடைக்கும்

Updated on 03-Jan-2024

Jio சமீபத்தில் தனது நீண்ட கால திட்டங்களை அப்டேட் செய்துள்ளது, நிறுவனம் இப்போது 365 நாட்கள் வேலிடிட்டியாகும் பல திட்டங்களை வழங்குகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், அன்லிமிடெட் 5G, இலவச SMS ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற பிரபலமான OTTகளுக்கான சந்தா ஆகியவை அடங்கும். ஜியோவின் அத்தகைய புதிய திட்டத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். நிறுவனம் இந்த திட்டத்தை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பணத்திற்கான மதிப்பு ப்ரீபெய்ட் பேக் என்று அழைக்கலாம். இதன் விவரங்களை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Jio ரூ 3227 ப்ரீபெய்ட் திட்டம்

Reliance Jio ப்ரீபெய்ட் பேக்கில் நிறுவனம் பல புதிய திட்ட்டத்தை கொண்டு வந்துள்ளது, இது இது 336 நாட்கள் வேலிடிட்டியில் தொடங்கி 365 நாட்கள் வரை வேலிடிட்டியாகும் இந்த திட்டங்கள் பல வகையான நன்மைகளை வழங்குகின்றன.

அத்தகைய ஒரு திட்டம் ரூ 3227 ஆகும். இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது MyJio ஆப் மூலம் செயல்படுத்தப்படலாம். இந்த திட்டத்தில், பயனர் தினசரி அடிப்படையில் 2 ஜிபி டேட்டாவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது அதாவது, திட்டத்தில் மொத்த டேட்டா நன்மை 730 ஜிபி ஆகும். தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 64kbps ஆக இருக்கும் என்பதை இங்கே கவனிக்கவும். ஆனால் இன்டர்நெட் இயங்கி கொண்டே இருக்கும்.

இதில் அன்லிமிடெட் காலிங் திட்டமாகும், இதில் வேலிடிட்டியாகும் வரை பயனர் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை செய்யலாம். இதில் STD மற்றும் லோக்கல் கால்கள் அடங்கும். இதில் OTT என்டர்டைமேன்ட்காக திட்டத்தில் ஒரு சிறப்பு நன்மையும் உள்ளது. இதனுடன், நிறுவனம் பிரைம் வீடியோ மொபைல் எடிசனில் சந்தாவையும் 1 வருடத்திற்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 5ஜி வரம்பற்ற டேட்டாவும் கிடைக்கிறது. ஜியோவின் சமீபத்திய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பேக் தினசரி அடிப்படையில் 100 இலவச SMS வழங்குகிறது.

இதையும் படிங்க: Redmi Note 12 4G யின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இதில் ஜியோவின் சில ஆபஸ் சப்ச்க்ரிப்சனும் வழங்கப்படுகிறது, அதும் முழுசா இலவசமாக கிடைக்கும், ஜியோ ஆப்ஸ் இலவச சந்தா பற்றி பேசுகையில், இது உங்களுக்கு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் பயன்பாடுகளின் சந்தாவை வழங்குகிறது. JioTV மூலம், திட்டத்தின் செல்லுபடியாகும் வரை பயன்பாட்டில் உங்கள் மொபைலில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். JioCinema இல் சமீபத்திய திரைப்படங்களைப் பார்க்கலாம். திட்டத்துடன் கிடைக்கும் JioCloud கூடுதல் சேமிப்பிடத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் இங்கே, நிறுவனம் ஜியோ பிரீமியம் சந்தாவை சேர்க்கவில்லை. இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பார்வையிடலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :