Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ப்ளேயர் ஆகும். ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் புதிய 5ஜி இன்டிக்ரேடட் மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தளமான ‘ஜியோ-பிரைன்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. JioBrain அனைத்து வகையான தொழில்கள் மற்றும் பிஸ்னஸ்க்கான ஒருங்கிணைந்த மெஷின் லேர்னிங் தளத்தை வழங்குகிறது.
ஜியோ ப்ரைன் இயங்குதளமானது, தற்போதுள்ள நிறுவனங்களின் நெட்வொர்க்குகளுடன் இணைப்பதன் மூலம் எளிதாக வேலை செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்த, நிறுவனங்கள் தங்கள் தற்போதைய நெட்வொர்க்கை மாற்ற வேண்டியதில்லை. டெலிகாம் நெட்வொர்க், எண்டர்பிரைஸ் நெட்வொர்க் அல்லது எந்த வகையான ஐடி நெட்வொர்க்காக இருந்தாலும், ஜியோ ப்ரைன் அனைத்து வகையான நெட்வொர்க்குகளுடனும் இணைப்பதன் மூலம் வேலை செய்ய முடியும்.
நூற்றுக்கணக்கான இஞ்சினியர்களின் முயற்சி மற்றும் இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பொருத்தப்பட்ட இந்த புதுமையான தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. JioBrain பிளாட்பார்மில் மெஷின் லேர்னிங் எளிதாக்க 500க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்கள் உள்ளன. போட்டோக்கள் வீடியோக்கள், டேக்ச்ட்கள் டாக்யுமேன்ட்கள் போன்றவற்றுக்கு அட்வான்ஸ் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அம்சம் இதில் உள்ளது. இதில் இன் பில்ட் AI அல்காரிதம்கள் போன்ற அம்சங்கள் ஜியோ பிரைன் இயங்குதளத்திலும் உள்ளன.
‘ஜியோ-பிரைன்’ 5ஜி மற்றும் எதிர்கால 6ஜிக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நம்புகிறது. இது தொழில்துறை மாற்றம் மற்றும் நெட்வொர்க் மேம்படுத்தலை ஆதரிக்கும், அத்துடன் 6G மேம்பாட்டிற்கான தளத்தை உருவாக்கும், அங்கு இயந்திர கற்றல் ஒரு முக்கிய திறனாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க:Moto G24 Power இந்தியாவில் அறிமுகம் 50MP கேமரா கொண்டிருக்கும்
ஜியோ பரைநின் நோக்கத்தை விரிவுபடுத்த இதுபோன்ற கருத்துகளுடன் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்கை ஆராய்ச்சியாளர்களுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.