100ரூபாய்க்கு குறைவான விலையில் இருக்கும் ஜியோவின் Sachet Packs!

Updated on 19-Jan-2018

ஜியோவிற்கு போட்டியாக மற்ற டெக்னாலஜி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை தொடர்ந்து புதுப்புது ஆபர்கள் அறிவித்து வருகின்றன. அமேசனில் 3 GB ரேம் & 32 GB ரோம் மொபைல்களில் ஆபர் கிடைக்கிறது,

சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சில சலுகைகளை அறிவித்தது. அதன் பின்னர், மாத ரீசார்ஜ் கட்டணத்தை ரூபாய்.50 வரை குறைத்தது. இந்நிலையில் தற்போது Sachet Packs என்ற பெயரில் மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ரீசார்ஜ் சலுகை ரூ.100-க்கும் குறைவான விலையில் வழங்கப்பட்டுள்ளது. அவை, ரூ.19, ரூ.52 மற்றும் ரூ.98 ரீசார்ஜ் ஆகும்.

# ரூபாய்19-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, 0.15 GB 4G டேட்டா, இந்தியா முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 20 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்ட ஒரு நாள்.

# ரூபாய்.52-க்கு ரீசார்ஜ் செய்தால், 1.05 GB 4G டேட்டா, ரோமிங் உட்பட அன்லிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 70 எஸ்எம்எஸ் ஆகியவை 7 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். மேலும் இதில் ஜியோ ஆப்ஸ் சேவையும் கிடைக்கும்.

# ரூபாய்.98-க்கு ரீசார்ஜ் செயும் போது, 2.1 GB 4G டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 140 SMS ஆகியவை 14 நாட்களுக்கு கிடைக்கும். மேலும், நாள் ஒன்றிற்கு 0.15 GB பயன்படுத்திய பின்னர் டேட்டா வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

& 32 GB ரோம் மொபைல்களில் ஆபர் கிடைக்கிறது,

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :