ஜியோ – ஏர்டெல் விபரீத மோதலில்: பணயமான ஆர்காம்?
கடன் பிரச்சனை காரணமாக ஆர்காம் சொத்துகளை விற்க, குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு ஆர்காம் சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை துவங்கியது. அந்த ஏலத்தில் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம், டவர், பைபர் உள்ளிட்ட சொத்துகளை ஜியோ வாங்கியது.
ஆர்காம் நிறுவனத்தின் 4ஜி சேவை மற்றும் 43,000 டவர்களை ஜியோ வாங்கி இருக்கிறது. இதில் கிடைத்த தொகை மூலம் ஆர்காம் தனது கடனை அடைக்கும் என தெரிகிறது என கடந்த மாதம் செய்தி வெளியானது.
தற்போது, ஏலத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஆர்காம் ஏலத்தில் விட உள்ளது. இதையும் ஜியோ வாங்க இருப்பதாக தெரிகிறது. ஆனால், போட்டியே இல்லாமல் இருந்த ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் இதில் நுழைந்துள்ளது.
அனில் ஆம்பானிக்கு சொந்தமான ஆர்காம் நிறுவனத்தின் இந்தியாவில் 22 வட்டங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்டரம் 70 யூனிட்களாக உள்ளது. இதனை 2021 வரை பயன்படுத்த உரிமை கொண்டுள்ளது ஆர்காம்.
இதனை வாங்கவே தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது. 850 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டால் சுமார் 4000 கோடி ரூபாய் ஆர்காம் நிறுவனத்திற்கு கிடைக்குமம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile