Jio,Airtel,மற்றும் VI:ரூ,299 யில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் காலிங்

Jio,Airtel,மற்றும் VI:ரூ,299 யில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் காலிங்
HIGHLIGHTS

Jio,Airtel,மற்றும் VI போன்ற நெட்வொர்க் வழங்குநர் நிறுவனங்கள் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன

300 ரூபாய்க்கும் குறைவான 28 நாட்கள் வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்

இந்த பட்ஜெட்டில் ஜியோ மற்றும் ஏர்டெல் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன

நீங்கள் ஒரு மாத வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பெற விரும்பினால் Jio ,Airtel, மற்றும் VI போன்ற நெட்வொர்க் வழங்குநர் நிறுவனங்கள் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. 300 ரூபாய்க்கும் குறைவான 28 நாட்கள் வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம் இருப்பினும், இந்த பட்ஜெட்டில் ஜியோ மற்றும் ஏர்டெல் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. வோடபோன் ஐடியா தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களிலும் அன்லிமிடெட் காலிங் SMS மற்றும் ஹை டேட்டா ஆகியவை கிடைக்கும்.

Jio ரூ,299 கொண்ட திட்டம்.

ஜியோவின் ரூ.299 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேசமயம் அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகிறது. வேலிடிட்டியைப் பொறுத்தவரை, இந்த திட்டம் 28 நாட்களுக்கு நீடிக்கும். வொயிஸ் காலிற்கு இந்த திட்டம் அன்லிமிடெட் காளிங்கை வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 SMS கிடைக்கும். மற்ற நன்மைகளில் JioCinema மற்றும் பிற Jio ஆப்களுக்கான சப்போர்ட் அடங்கும்.

Airtel ரூ,299 கொண்ட திட்டம்

ஏர்டெல்லின் ரூ.299 திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 28 நாட்களுக்கு நீடிக்கும். வொயிஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் தினமும் 100 SMS வழங்குகிறது. அப்பல்லோ 24|7 வட்டம், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் ம்யூசிக்கை அனுபவிக்கலாம்.

Vodafone Idea ரூ,299 கொண்ட திட்டம்

Vodafone Idea ரூ,299 யின் கொண்ட திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது இதன் ஹை ஸ்பீட் டேட்டா லிமிட் முடிந்த பிறகு இதன் ஸ்பீட் 64Kbps யில் வேலை செய்கிறது, இந்த திட்டம் 28 நாட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வொயிஸ் காளிங்கை பார்க்கும்போது, ​​இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கை வழங்குகிறது. SMS பற்றி பேசுகையில், இந்த திட்டம் தினமும் 100 SMS வழங்குகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் நைட் டேட்டா கிடைக்கும். திங்கள்-வெள்ளி வரை மீதமுள்ள டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம். மேலும் 2ஜிபி டேட்டா பேக்கப் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாதத்திற்கு கிடைக்கிறது. மற்ற பலன்களில் Vi Movies & TVக்கான அக்சஸ் அடங்கும்.

இதையும் படிங்க: Tecno ஸ்மார்ட்போனை iphone தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo