ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் காலடி வைத்ததிலிருந்து எக்கச்சக்க மற்ற டெலிகாம் நிறுவனகளுக்கு இடையில் ஏக ப்பட்ட சவாலை சந்திக்க வேண்டி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ வருவதற்கு முன்பு வெறும் 2g/3g வழங்கி வந்த மற்ற டெலிகாம் துறை ஜியோ நிறுவனம் காலடி எடுத்து வைத்த பிறகு 4g வழங்க ஆரம்பித்துள்ளது. இதனுடன் தங்கள் பயனர்களை தக்க வைத்துக்கொள்ள நிறைய ஆபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று ஜியோ VS வோடபோன் VS ஐடியா மற்றும் ஏர்டெல் வழங்கும் 200க்குள் இருக்கும் திட்டங்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்
ஏர்டெல் வழங்கும் 199ரூபாய் திட்டம்
ஏர்டெலின் 199 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு, தினமும் 1.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா , அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 SMS போன்றவற்றை இலவசமாக அனுப்பலாம். கூடுதலாக ஏர்டெல் டிவி பிரீமியம் மற்றும் ZEE5 சேவையும் இலவசமாக வழங்குகிறது.
ஐடியா வழங்கும் 199ரூபாய் திட்டம்
ஐடியா வழங்கும் 199 ரூபாய் திட்டத்தைச் செய்தால் 28 நாட்களுக்குத் தினம் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 SMS போன்றவற்றை இலவசமாக அனுப்பலாம். ஐடியா நிறுவனம் 9 ரூபாய் முதல் 1,699 ரூபாய் வரையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது.
வோடபோன் வழங்கும் 199ரூபாய் திட்டம்
வோடாஃபோனின் 199 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினம் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 SMS போன்றவற்றை இலவசமாக அனுப்பலாம். கூடுதலாக லைவ் டிவி பிரீமியம் மற்றும் வோடாஃபோன் பிளே ஆப் சேவையும் இலவசமாக வழங்குகிறது.
ஜியோ வழங்கும் 199 ரூபாய் திட்டம்
ஜியோ வழங்கும் 199 ரூபாய் திட்டத்தைச் செய்தால் 28 நாட்களுக்குத் தினம் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 SMS போன்றவற்றை இலவசமாக அனுப்பலாம். இவை மட்டும் இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் ஜியோ டிவி, ஜியோ சாவன், ஜியோ சினிமா போன்ற சேவைகளும் இலவசமாகக் வழங்கப்படுகிறது..