Jio, Airtel, VI யின் ரூ.500-க்குள் வரும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்ட்ம்

Updated on 25-Oct-2023
HIGHLIGHTS

Jio, Airtel, VI நிறுவனங்களும் 3 மாத வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ.500-க்கும் குறைவான பட்ஜெட்டில் வரும் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்

ஜியோவின் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டத்தில் 6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது

ஒவ்வொரு மாதமும் ரீச்சார்ஜ் செய்யும் தொல்லையில் இருந்து தப்பிக்க அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை விரும்புகிறோம் அந்த வகையில் Jio, Airtel, VI இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களும் 3 மாத வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தேடுகிறிர்கள் என்றால் இது உங்களுக்கு தான், ஜியோ, ஏர்டெல் , வோடபோன் ஐடியா யின் இந்த ப்ரீ பெய்ட் திட்டத்தில் 3 மாத வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.உங்களுக்கு அதிக இன்டர்நெட் தேவையில்லை மற்றும் திட்டத்தை நீண்ட நேரம் வேலிடிட்டி வைத்திருக்க விரும்பினால், ரூ.500-க்கும் குறைவான பட்ஜெட்டில் வரும் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea யின் 459 ரூபாய் கொண்ட திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் 6ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியாகும் வொயிஸ் காளிங்கை பொறுத்தவரை, இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் சப்போர்ட் செய்கிறது இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 1000 SMS வழங்கப்படுகிறது. ஹை ஸ்பீட் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, 50p/MB என்ற விகிதத்தில் கட்டணங்கள் விதிக்கப்படும். மற்ற பலன்களில் Vi Movies & TV அடிப்படை அக்சஸ் அடங்கும், இதில் லைவ் டிவி, செய்திகள், மூவீ மற்றும் அசல்களுக்கான அணுகல் அடங்கும்.

Vodafone Idea new plan

Airtel யின் 455 கொண்ட ப்ரீ பெய்ட் திட்டம்..

ஏர்டெல்லின் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. வைஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் மொத்தம் 900SMS வழங்குகிறது. மற்ற நன்மைகளில் அப்பல்லோ 24|7 Circle இலவச அணுகல், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : BSNL யின் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 2GB டேட்டா

#Airtel

Jio யின் 395ரூபாய் கொண்ட ப்ரீ பெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டத்தில் 6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 84 நாட்களுக்கு நீடிக்கும். வொயிஸ் காலிங்கை பொறுத்தவரை, இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் SMS விஷயத்தில் இது 1000 இலவச மெசேஜ்களை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது. மற்ற நன்மைகளில் ஜியோ ஆப்களுக்க்ன இலவச அக்சஸ் அடங்கும்.

Jio annual plan
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :