Jio, Airtel, மற்றும் Vi ஆகிய மூன்றுமே ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar அக்சஸ் வழங்குகின்றன. இன்று இந்த டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் குறைந்த விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களைப் பார்ப்போம்.
இதில் டேட்டா வவுச்சர்களை நாங்கள் சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும், மாறாக சிம்மை செயலில் வைத்திருக்க, வொயிஸ் காலிங் டேட்டா மற்றும் SMS போன்ற அனைத்து அடிப்படை நன்மைகளையும் சேவை வேலிடிட்டியகும் திட்டங்களையும் பற்றி பார்க்கலாம். மேலும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களும் மொபைல் திட்டங்களாகும், அதாவது இந்த சந்தா மூலம் டிவியில் உள்ளடக்கத்தை இயக்க முடியாது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.328 திட்டமானது 42ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது ஒருமுறை பயன்படுத்தும் டேட்டா அல்ல. இதில், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டாவைப் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும், எனவே மொத்த டேட்டா 42ஜிபி ஆக இருக்கும். இது தவிர, பயனர்கள் இந்த பேக்கில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் வழங்குகிறது இந்த திட்டத்துடன் இணைந்த Disney+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு. வழங்கப்படுகிறது
தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். இந்த ரீசார்ஜில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களுக்கான அக்சஸ் வழங்கப்படுகிறது.
பார்தி ஏர்டெல்லின் ரூ.499 திட்டமானது தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar, அன்லிமிடெட் 5G டேட்டா, Airtel Extreme Play, Apollo 24|7 Circle, இலவச HelloTunes மற்றும் Wynk Music ஆகியவை அடங்கும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஹீரோ அன்லிமிடெட் பலன்களைப் வழங்குகிறது இதில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights ஆகியவை அடங்கும். இது தவிர, பயனர்களுக்கு Vi Movies & TV மற்றும் Disney + Hotstar மொபைல் சந்தாவும் 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம்